கல்வி

புதுவையில் 93.67 சதவீதம் தேர்ச்சி

DIN

10- ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் புதுச்சேரி மாநிலம் 93.67 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இது கடந்த கல்வியாண்டைக் காட்டிலும், 1.25 சதவீதம் அதிகமாகும்.
புதுச்சேரி மாநிலத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 17,495 மாணவ, மாணவிகள் எழுதினர்.
இந்த நிலையில், 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை புதுச்சேரி அரசின் பள்ளிக் கல்வித் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
இதில், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் தேர்வு எழுதிய 17,495 பேரில், 16,388 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 93.67 சதவீதம் ஆகும்.
மாணவிகள் 8,278 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 95.90 சதவீதம். அதேபோல, மாணவர்கள் 8,110 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 91.5 சதவீதம். மாணவர்களைக் காட்டிலும் மாணவிகள் 4.40 சதவீதம் கூடுதலாகத் தேர்ச்சி பெற்றனர்.
பள்ளிகள் தேர்ச்சி விகிதம்: அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 87.11 சதவீதம். தனியார் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 97.78 சதவீதம்.
அரசுப் பள்ளிகளில் தேர்வு எழுதிய 6,734 பேரில் 5,866 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களில், மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 81.63 சதவீதம். மாணவிகள் தேர்ச்சி விகிதம் 91.97 சதவீதம்.
தனியார் பள்ளிகளில் தேர்வு எழுதிய 10,761 பேரில் 10,522 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம்: மாணவர்கள் - 96.98 சதவீதம். மாணவிகள் - 98.68 சதவீதம். மொத்த தேர்ச்சி விகிதம் 97.78 சதவீதம்.
பிராந்திய வாரியாக தேர்ச்சி விகிதம்: புதுச்சேரி பிராந்தியத்தில் தேர்வு எழுதிய 14,670 பேரில், 13,841 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 94.35 சதவீதம்.
காரைக்கால் பிராந்தியத்தில் தேர்வு எழுதிய 2,825 பேரில், 2,547 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 90.16 சதவீதம்.
புதுச்சேரி பிராந்திய அரசுப் பள்ளிகளில் 88.07 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 1.13 சதவீதம் அதிகமாகும். காரைக்கால் பிராந்திய அரசுப் பள்ளிகளில் 83.32 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 6.11 சதவீதம் அதிகமாகும்.
143 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி: புதுச்சேரி, காரைக்காலில் மொத்தம் உள்ள பள்ளிகளின் எண்ணிக்கை 301. இவற்றில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள் விவரம்: புதுச்சேரி 117, காரைக்கால் 26 பள்ளிகள் என மொத்தம் 143 பள்ளிகள்.
100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகள்: புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களில் மொத்தம் உள்ள 111 அரசுப் பள்ளிகளில், 19 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றன. இவற்றில், 14 பள்ளிகள் புதுவையைச் சேர்ந்தவையாகும். 5 பள்ளிகள் காரைக்காலைச் சேர்ந்தவையாகும்.
100/100 மதிப்பெண்கள் பெற்றவர்கள்: பிரெஞ்சு - 19, கணிதம் - 425, அறிவியல் - 242, சமூக அறிவியல் - 1,673 பேர் என மொத்தம் 2,359 பேர் 100/100 மதிப்பெண்கள் பெற்றனர்.
இதேபோல, 500-க்கு 491 மதிப்பெண்களை 187 பேரும், 481-இல் இருந்து 490 வரை 836 பேரும், 476-இல் இருந்து 480 வரை 452 பேரும், 451-இல் இருந்து 475 வரை 2,223 பேரும், 401-இல் இருந்து 450 வரை 3,850 பேரும் மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT