கல்வி

மாநிலத்தில் ராமநாதபுரம் மாவட்டம் 3 ஆவது இடம்

DIN

பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் ராமநாதபுரம் மாவட்டம் மாநில அளவில் 3 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 248 பள்ளிகளிலிருந்து 8,814 மாணவர்கள், 9,165 மாணவிகள் என மொத்தம் 17,979 பேர் தேர்வு எழுதினர். இவர்களில் 8,690 மாணவர்கள், 9,058 மாணவிகள் என மொத்தம் 17,648 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன்மூலம், இந்தாண்டு 98.16 சதவிகிதம் தேர்ச்சி பெற்று ராமநாதபுரம் மாவட்டம் 3 ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.
கடந்த ஆண்டு 97.10 சதவிகிதம் தேர்ச்சி பெற்று, மாநில அளவில் 4 ஆவது இடத்தைப் பிடித்தது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 1.6 சதவிகிதம் தேர்ச்சி அதிகரித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 248 பள்ளிகளில், 83 அரசுப் பள்ளிகள், 29 அரசு உதவிபெறும் பள்ளிகள், 45 மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் என மொத்தம் 157 பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 26 பள்ளிகள் கூடுதலாக 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மாநில அளவில் 3 ஆவது இடத்தைப் பிடிக்கக் காரணமாக இருந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க. ஜெயக்கண்ணு, மாவட்டக் கல்வி அலுவலர்கள் கே. ராமர் (ராமநாதபுரம்), டி. பாலசுப்பிரமணியன் (பரமக்குடி) மற்றும் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களையும், ஆட்சியர் எஸ். நடராஜன் வெள்ளிக்கிழமை பாராட்டி பரிசு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அதிகாரி சி. முத்துமாரியும் பங்கேற்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT