கல்வி

மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்கள் 100 சதவிகிதம் தேர்ச்சி

DIN

திருச்சி மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்டு 10-ம் வகுப்பு பயின்றவர்கள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 4 பேர் 400-க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
திருச்சியில் மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் குழந்தை தொழிலாளர்களை இனம்கண்டு மீட்டு 24 மையங்கள் மூலம் அவர்களுக்கு கல்வி மற்றும் தங்குமிடம் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாவட்டம் முழுவதும் மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர்களில் 23 பேர் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர். வெள்ளிக்கிழமை வெளியான தேர்வு முடிவில் 23 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதுகுறித்து தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட (சியர்ஸ்) இயக்குநர் பியர்லின் செல்வகுமார் கூறியது:
திருச்சி மாவட்டத்தில் 23 பேர் 10-ஆம் வகுப்பு தேர்வு எழுதி, அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களில் 12 பேர் மாணவிகள். இதில் கொடியாம்பாளையத்தில் உள்ள ஒரு பட்டறையிலிருந்து மீட்கப்பட்டு, குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின் கீழ் துறையூர் தனியார் பள்ளியில் படித்த மாணவர்,
அரங்கூர் பகுதியில் ஒரு சோதிட நிலையத்தில் உதவியாளராக பணியாற்றிய மாணவி, திருச்சி உறையூர் பகுதியில் வீட்டு வேலை பார்த்த ஒரு மாணவர், பள்ளக்காடு பகுதியில் வீட்டுவேலை பார்த்துவந்த மாணவி ஆகியோர் 400-க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்றவர்கள் தொடர்ந்து உயர்கல்வி பெறவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

SCROLL FOR NEXT