கல்வி

பல் மருத்துவக் கலந்தாய்வு நிறைவு

DIN

பல் மருத்துவ படிப்புக்கான 2-ஆம் கட்ட கலந்தாய்வு புதன்கிழமையுடன் நிறைவுபெற்றது.
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆக.24-ஆம் தேதி தொடங்கியது. எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு செப்.3-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. தொடர்ந்து செப்.4-ஆம் தேதி முதல், பல் மருத்துவப் படிப்புக்கான 2-ஆம் கட்ட கலந்தாய்வு நடைபெற்றது. புதன்கிழமையுடன் நிறைவுபெற்ற இந்தக் கலந்தாய்வின் முடிவில் அரசு பல் மருத்துவக்கல்லூரி மற்றும் தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் அனைத்தும் நிரம்பின. புதன்கிழமை மட்டும் 126 அரசு ஒதுக்கீட்டு இடங்கள், 99 நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் நிரப்பப்பட்டன. நடந்து முடிந்த கலந்தாய்வில் தற்போது 494 நிர்வாக ஒதுக்கீட்டு பல்மருத்துவ இடங்கள் மட்டும் காலியாக உள்ளன. இது தொடர்பாக மருத்துவக் கல்வி தேர்வுக்குழு செயலர் டாக்டர் ஜி.செல்வராஜ் கூறியது: எஞ்சியுள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் அந்தந்த கல்லூரிகளிடமே ஒப்படைக்கப்படும். அந்த இடங்களை நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் அவர்கள் நிரப்பிக் கொள்ளலாம். கலந்தாய்வில் இடங்களைப் பெற்றவர்கள் வெள்ளிக்கிழமைக்குள்(செப்.8) கல்லூரியில் சென்று சேர வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT