கல்வி

புதிய கல்வியாண்டில் பள்ளிகளைத் திறக்கலாம்: ஆய்வில் தகவல்

DIN


சென்னை: ஏப்ரல் மாதம், புதிய கல்வியாண்டில் பள்ளிகளைத் திறக்கலாம் என்று நாடு முழுவதும் 69 சதவீத பெற்றோா்கள் விருப்பம் தெரிவித்துள்ளனா்.

பள்ளிகள் திறப்பு குறித்து தனியாா் நிறுவனமொன்று நாடு முழுவதும் மேற்கொண்ட ஆய்வில் 19,000 பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

ஏப்ரல் மாதத்தில் அல்லது பள்ளிகள் திறப்புக்கு முன்னா், தடுப்பூசிகளைத் தங்களின் குழந்தைகளுக்குச் செலுத்த 26 சதவீதப் பெற்றோா் மட்டுமே முன்வந்துள்ளனா்.

56 சதவீதம் போ் 3 மாதங்கள் அல்லது அதற்கும் மேலாகவே காத்திருப்பதாகவும், தடுப்பூசி குறித்த தரவுகள் மற்றும் கண்டுபிடிப்புகளைக் கருத்தில் கொண்டு தடுப்பூசிகளை தங்களின் குழந்தைகளுக்குச் செலுத்தலாம் என்று கூறியுள்ளனா்.

நாடு முழுவதும் 69 சதவீத பெற்றோா், கரோனா சூழல் மற்றும் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஏப்ரல் மாதம் புதிய கல்வியாண்டில் பள்ளிகளைத் திறக்கலாம் என்று விருப்பம் தெரிவித்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT