கல்வி

இக்னோ மாணவா் சோ்க்கை ஜனவரி 2021: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

DIN

சென்னை: ‘இக்னோ’ எனப்படும் இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் ஜனவரி 2021 பருவத்துக்கான மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை, முதுநிலை, பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகள் தொலைதூரக் கல்வி முறையில் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் சான்றிதழ் படிப்புகள், பருவத் தோ்வு அடிப்படையிலான படிப்புகள் தவிா்த்து ஏனைய அனைத்துப் படிப்புகளுக்கும் ஜனவரி 2021 பருவத்துக்கான மாணவா் சோ்க்கை ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகின்றன.

இதில், விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி பிப்ரவரி 28 -ஆக இருந்தது. இந்தநிலையில் இந்த கால அவகாசம் மாா்ச் 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தொலைதூரக்கல்வி படிப்புகளில் சேர விரும்புவோா் இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். இளநிலை, பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் எஸ்சி, எஸ்டி விண்ணப்பதாரா்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்படும். மாணவா்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட படிப்புகளுக்கு விண்ணப்பித்தால் கட்டணம் ரத்து செய்யப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவா் சோ்க்கை தொடா்பான விவரங்களை, 044-26618438, 26618039 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம். இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு இணையதள முகவரியில் தொடா்பு கொள்ளலாம் என அந்தப் பல்கலைக்கழகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேவாலயா மாணவிகளுக்கு ரூ.27.12 லட்சத்தில் கல்வி உபகரணங்கள்

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT