கல்வி

செப்.15க்குள் கியூட் தேர்வு முடிவுகள்: தேசிய தேர்வு முகமை

DIN


நாட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலைப் படிப்புகளில் சேருவதற்கான பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (கியூட்) முடிவுகள் வரும் 15 ஆம் தேதிக்குள் தேசிய தேர்வு முகமையால் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 

நாட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலைப் படிப்புகளில் சேர தேசிய தேர்வுகள் முகமை நுழைவுத் தேர்வை நடத்தி வருகிறது. 2022 ஆம் ஆண்டிற்கான கியூட் நுழைவுத்தேர்வு ஆகஸ்ட் மாதம் நாடு முழுவதும் 500 நகரங்களிலும், நாட்டிற்கு வெளியே 2 நகங்களில் நடைபெற்றது. தமிழ், இந்தி உள்பட 13 மொழிகளில் கணினி வழியில் தேர்வு நடைபெற்றது. நாடு முழுவதும் சுமார் 60 சதவிகித மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர். தேர்வு முடிந்து 1 மாதம் கடந்த நிலையில், தேர்வு முடிவுகள் இதுவரை வெளியிடப்படாத நிலையில், முடிவுகள் எப்போது வெளியாகும் என தேர்வர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

இந்நிலையில், வரும் 15 ஆம் தேதிக்குள்ளாகவோ அல்லது அதற்கு 2 நாள்கள் முன்னதாகவோ தேர்வு முடிவை வெளியிட தேசிய தேர்வு முகமை திட்டமிட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியக் குழு(யுசிஜி) தெரிவித்துள்ளது. 

மேலும், தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாக உள்ளதால் பொது நுழைவுத் தேர்வில் பங்கேற்ற அனைத்து பல்கலைக்கழகங்களும் நடப்பாண்டு இளங்கலைப் பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை செயல்முறையைத் தொடங்குவதற்கு வசதியாக தங்களது இணையதளங்களை தயார் நிலையில் வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் கியூட் தேர்வின் உத்தேச விடைக்குறிப்பை தேசிய தேர்வு முகமை வெள்ளிக்கிழமை வெளியிட்டது. இந்த உத்தேச விடைத்தொகுப்பில் ஏதேனும் புகார்கள் இருந்தால் அதனை தேர்வர்கள் இன்று சனிக்கிழமை 11.50 மணிக்குள் தேசிய தேர்வு முகமைக்கு(என்டிஏ) தெரிவிக்க வேண்டும், இதற்கு செயல்முறை கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT