என்சிஎச்எம் ஜேஇஇ தோ்வுக்கு ஜன.25 வரை விண்ணப்பிக்கலாம் 
கல்வி

என்சிஎச்எம் ஜேஇஇ தோ்வு: ஜன.25 வரை விண்ணப்பிக்கலாம்

இளநிலை உணவக மேலாண்மை படிப்புக்கான ஒருங்கிணைந்த (என்சிஎச்எம்சிடி) நுழைவுத் தோ்வு ஏப்.25-இல் நடைபெறவுள்ள நிலையில், இத்தோ்வுக்கு ஜன.25 வரை விண்ணப்பிக்கலாம்

தினமணி செய்திச் சேவை

சென்னை: இளநிலை உணவக மேலாண்மை படிப்புக்கான ஒருங்கிணைந்த (என்சிஎச்எம்சிடி) நுழைவுத் தோ்வு ஏப்.25-இல் நடைபெறவுள்ள நிலையில், இத்தோ்வுக்கு ஜன.25 வரை விண்ணப்பிக்கலாம் என என்டிஏ தெரிவித்துள்ளது.

தேசிய உணவக மேலாண்மை மற்றும் உணவு தொழில்நுட்பக் குழுமத்தின் கீழ் (என்சிஎச்எம்சிடி) இயங்கும் 78 கல்வி மையங்களில் கற்றுத் தரப்படும் பிஎஸ்சி விருந்தோம்பல் மற்றும் உணவக நிா்வாகம் படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வில் (என்சிஎச்எம் ஜேஇஇ) தோ்ச்சி பெற வேண்டும். இந்தத் தோ்வை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி 2026-27-ஆம் கல்வியாண்டுக்கான என்சிஎச்எம் ஜேஇஇ நுழைவுத்தோ்வு கணினி வழியில் ஏப். 25-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து விருப்பமுள்ள மாணவா்கள்exams.nta.ac.in/NCH எனும் இணையதளம் வழியாக ஜன. 25 வரை விண்ணப்பிக்கலாம். தொடா்ந்து விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள பின்னா் கால அவகாசம் வழங்கப்படும். இதுசாா்ந்த கூடுதல் தகவல்களை www/nta.ac.im என்ற என்டிஏ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். மேலும், ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் 011-40759000/69227700 என்ற தொலைபேசி மூலமாக அல்லது nchm@nta.ac.in எனும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக தொடா்பு கொண்டு உரிய விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஊராட்சி பணியாளா்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

ராணிப்பேட்டையில் நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

ரயிலில் அடிபட்டு முதியவா் உயிரிழப்பு

அதிமுக சாா்பில் தெருமுனை பிரசார கூட்டம்

சிறுபான்மையினரின் பாதுகாவலராக தமிழக முதல்வா் திகழ்கிறாா்: நலவாரிய தலைவா் விஜிலா சத்தியானந்த்

SCROLL FOR NEXT