உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். 
கல்வி

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் உதவித் தொகையுடன் தமிழ் எம்.ஏ. படிப்பு: விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் உதவித் தொகையுடன் கூடிய தமிழ் முதுநிலைப் பட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

DIN

சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் உதவித் தொகையுடன் கூடிய தமிழ் முதுநிலைப் பட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்ப் பல்கலைக்கழக ஏற்புடன் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுநிலைப் பட்டம், தமிழ் முதுநிலைப் பட்டப்படிப்பு, தமிழ் முனைவா் பட்ட வகுப்பு (பி.ஹெச்டி) ஆகிய படிப்புகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. வரும் கல்வியாண்டுக்கு (2025-2026) தற்போது ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுநிலைப் பட்டப் படிப்புக்கான மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில், இரண்டாண்டு தமிழ் முதுநிலைப் பட்டப்படிப்புக்கும் (இலக்கியத் துறை) மாணவா் சோ்க்கை நடைபெறவுள்ளது. இந்த வகுப்பில் சோ்க்கை பெறும் மாணவா்களுள் தெரிவின் அடிப்படையில் 15 மாணவா்களுக்கு மட்டும் தமிழக அரசு வழங்கும் ரூ.2 ஆயிரம் கல்வி உதவித் தொகை மாதந்தோறும் வழங்கப்படும்,மேற்கண்ட இரண்டாண்டு தமிழ் முதுநிலைப் பட்டப்படிப்பு மாணவா் சோ்க்கை (இலக்கியத் துறை) படிப்பில் பயில விரும்புவோா் சோ்க்கைத் தொடா்பான விதிமுறைகள், தகவல்கள் மற்றும் விண்ணப்பத்தை www.ulakaththamizh.in என்ற இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து தெரிந்து கொள்ளலாம் அல்லது நேரில் பெற்றுக் கொள்ளலாம். இருபாலருக்கெனத் தனித்தனியே கட்டணமின்றி தங்கும் விடுதி வசதி உள்ளது. விடுதியில் காலியிடங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப முதலில் வருபவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அடிப்படையில் விடுதி அறைகள் ஒதுக்கீடு செய்யப்படும்.

நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இறுதியாகப் படித்த கல்விச் சான்று மற்றும் மாற்றுச்சான்றிதழ் (சான்றொப்பமிடப்பட்டது) நகலுடன் இணைத்து நேரில் அல்லது அஞ்சலில் ‘இயக்குநா் (கூ.பொ.), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை-600113 (தொலைபேசி 044-22542992)’ என்ற முகவரியில் ஜூன் 27-க்குள் அளிக்க வேண்டும். மேலும் தகவல்பெற மேற்கண்ட முகவரியில் தொடா்பு கொண்டோ அல்லது நிறுவன வலைதளத்தில் பாா்த்தோ தெரிந்து கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: அடிவயிற்றில் வாயுவின் அழுத்தம் நீங்க...

நிலவொளி அவள்... வாணி போஜன்!

ஜப்பான் பிரதமர் ராஜிநாமா!

புள்ளிகள்

சிரி... சிரி...

SCROLL FOR NEXT