கோவையில் தேசிய பஞ்சாலைகழகத்தின் அலுவலர்களுக்கான பயிற்சி மையமாக கடந்த 2002ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த மையம், 2004ஆம் ஆண்டில் இந்திய ஜவுளி அமைச்சகத்தால் ஜவுளி மேலாண்மைக் கல்லூரியாக மாற்றப்பட்டது. முதுநிலை ஜவுளி மேலாண்மை படிப்புகள் மட்டுமே நடத்தப்பட்டு வந்த இந்த நிறுவனத்தில் கடந்த 2016-17 ஆம் கல்வியாண்டு முதல் பி.எஸ்சி., எம்.பி.ஏ. படிப்புகள் நடத்தப்படுகின்றன.
ஜவுளித் துறையில் எம்.பி.ஏ. படிப்பை வழங்கும் ஒரே நிறுவனமாக இருக்கும் இந்த கல்லூரியில் பி.எஸ்சி, டெக்ஸ்டைல்ஸ் அண்ட் அப்பேரல், பி.எஸ்சி. டெக்ஸ்டைல்ஸ் (டெக்னிகல் டெக்ஸ்டைல்ஸ்), பி.எஸ்சி. டெக்ஸ்டைல்ஸ் (பிசினஸ் அனலிடிக்ஸ்), பி.பி.ஏ. டெக்ஸ்டைல்ஸ் பிசினஸ் அனலிடிக்ஸ் ஆகிய இளநிலை படிப்புகள் நடத்தப்படுகின்றன.
அதே போல் எம்.பி.ஏ.-வில் ஜவுளி மேலாண்மை, ஆடை மேலாண்மை. சில்லறை மேலாண்மை, தொழில்நுட்ப ஜவுளி மேலாண்மை ஆகிய படிப்புகள் நடத்தப்படுகின்றன.
மாணவர் சேர்க்கை
3 ஆண்டு இளநிலை பட்டப் படிப்பில் சேர, பிளஸ் 2 வில் கணிதம், இயற்பியல், வேதியியல், படிப்புகளில் குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண்கள் (பொதுப் பிரிவினர்) பெற்றிருக்க வேண்டும். முதுநிலை மாணவர் சேர்க்கை டான்செட் நுழைவுத் தேர்வின் அடிப்படையில் நடத்தப்படுகிறது.
வேலைவாய்ப்பு
இந்த நிறுவன மாணவ மாணவிகளுக்கு தேசிய ஜவுளித் துறை நிறுவனம் சார்ந்த ஆலைகள், டெக்ஸ்டைல் கமிட்டி, நிஃப்ட், கைத்தறி மேம்பாட்டுக் கழகம் போன்ற இடங்களில் பழகுநர் பயிற்சி, தொழில் பயிற்சிகள் வழங்கவும், தொழில் பயிற்சிக்காக வெளிநாடுகளுக்குச் செல்லவும் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த நிறுவனத்தில் பயின்றவர்கள் கோகுல்தாஸ் எக்ஸ்போர்ட்ஸ், டோரம் எக்ஸ்போர்ட்ஸ், கொக்கூன் ஆடைகள், ரேமண்டஸ் பாண்டலூன்ஸ் உள்ளிட்ட முன்னணி உள்நாட்டு, வெளிநாட்டு ஜவுளி நிறுவனங்களி உயர் பதவிகளில் பணியாற்றி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.