முகப்பு
படிப்புகள்

எதிர்கால வளர்ச்சிக்கு ஏற்ற தகவல்தொழில்நுட்ப படிப்புகள்!

எதிர்கால வளர்ச்சிக்கு ஏற்ற ஐ.டி. படிப்புகள் பற்றிய விவரங்கள்

Updated On : 10 மார்ச், 2026 at 4:30 AM
மென்பொருள் திறன் படிப்புகள்
பகிர்:

ஒவ்வொரு காலத்திலும் குறிப்பிட்ட படிப்புகள் மாணவர்களின் விருப்பமாகவும், மிகவும் வரவேற்புக்குரிய படிப்புகளாகவும் இருந்து வருகின்றன. பொறியியல் படிப்புகள் உச்சத்தில் கொடிகட்ட பறந்த நிலையில், அடுத்த சில ஆண்டுகளில் கலை, அறிவியல் படிப்புகள் கோலோச்சின. அதன் பின்னர் வணிகவியல் படிப்புகள் மாணவர்களின் விருப்பமாக மாறியது. கடந்த சில ஆண்டுகளாக கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளுக்கு மாணவர்களிடையே ஆர்வம் அதிகரித்து வருகிறது.

தகவல் தொழில்நுட்பத் துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், அத்துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் புதிய, புதிய படிப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல், இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ், சைபர் செக்யூரிட்டி, பிளாக் செயின் தொழில்நுட்பம் போன்றவை தகவல் தொழில்நுட்பத்தின் அடுக்கட்ட வளர்ச்சியாகப் பார்க்கப்படுகிறது. சர்வதேச அளவில் கடந்த சில ஆண்டுகளாகவே இந்த தொழில்நுட்பங்கள் பேசப்பட்டு வந்தாலும், இந்தியாவில் தற்போதுதான் இந்த தொழில்நுட்பங்கள் சார்ந்த படிப்புகள் பிரபலமாகி வருகின்றன. இவை இளநிலை பட்டப் படிப்புகளாக மட்டுமின்றி பொறியியல் பட்டப்படிப்பில் இணைக்கப்பட்ட பாடங்களாகவும், சான்றிதழ் படிப்புகளாகவும், டிப்ளமோ, முதுநிலை டிப்ளமோ படிப்புகளாகவும் வழங்கப்படுகின்றன.

இப்படிப்புகள் குறித்த தகவல்கள் :

செயற்கை நுண்ணறிவு (ஏஐ)

தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியானது, பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை தந்து கொண்டிருக்கிறது. அவற்றில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), இயந்திர கற்றல் (Machine Learning) ஆகியன அனைத்து துறைகளிலும் கோலோச்சும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

மனிதர்களின் உதவியுடன் இயந்திரங்களால் பல்வேறு செயல்களைச் செய்யக் கூடிய நுண்ணறிவுதான் செயற்கை நுண்ணறிவு எனப்படுகிறது. மனிதர்களின் பகுத்தறியும் திறன் அடிப்படையில் சிக்கல்களைத் தீர்ப்பது, விஷயங்களைத் திட்டமிடுவது, உணர்வது, பார்ப்பது, கேட்பது, சூழ்நிலைக்கேற்ப முடிவுகள் மேற்கொண்டு செயல்படுத்தக் கூடிய ஒரு பணியை கணினியைக் கொண்டு செய்து முடிக்க இயந்திரங்களை உருவாக்குவதுதான் இயந்திர கற்றல் எனப்படுகிறது.

வளர்ந்து வரும் இத்துறைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அறிமுகம் செய்யப்பட்ட ஏஐ - எம்எல் படிப்புகள் தற்போது பிரபலமாகி வருகின்றன.

இளநிலை பட்டம், முதுநிலை பட்டயப் படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு, பொறியியல், தொழில்நுட்பப் படிப்புகளாக பல்வேறு அரசு, தனியார் கல்வி நிறுவனங்களில் நடத்தப்படுகின்றன. இவை தனிப் படிப்புகளாகவும,ó பாரம்பரிய பொறியியல் பாடப் பிரிவுகளுடன் இணைத்தும் வழங்கப்படுகின்றன. தரவுகளை கையாளுதல், புத்தாக்கத் திறன், இயந்திர வடிவமைப்பு ஆகியவற்றில் ஆர்வம் உள்ள இளைஞர்கள் இந்தத் துறையைத் தேர்வு செய்யலாம்.

இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் (ஐஓடி)

இரு இயந்திரங்களுக்கு இடையே தகவல் தொடர்பைக் கொண்டு செல்வதற்கு தேவையான தொழில்நுட்பத்தை, இணையதள தொழில்நுட்பம் என்கிறோம். இதைத் தொழிலகங்களுக்குப் பயன்படுத்தும்போது இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (ஐஓடி) என அழைக்கப்படுகிறது. இதை உற்பத்தி, உடல் நலம் உள்பட அனைத்து தொழில் துறைகளிலும் மட்டுமல்லாமல், வேளாண்மையிலும் பயன்படுத்தலாம். வயலில் எவ்வளவு ஈரப்பதம் இருக்கிறது. எவ்வளவு தண்ணீர் பாய்ச்ச வேண்டும் என்கிற தரவுகளை வீட்டிலிருந்தே பார்த்து அடுத்தக் கட்ட நடவடிக்கையைச் செய்ய முடியும்.

பெரிய நிறுவனங்களில் இந்த தொழில்நுட்பம் நடைமுறைக்கு வந்துள்ளது. வரும் காலங்களில் அனைத்து தொழிலகங்களிலும் இந்தத் தொழில்நுட்பம்தான் இருக்கும். இணையதளத்தின் வளர்ச்சியைப் போல,

இன்டர்நெட் ஆப் திங்ஸின் வளர்ச்சியும் இருக்கும் என கணிக்கப்படுகிறது. தொழில் துறையில் ரோபோடிக்ஸ், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) போன்று இத்தொழில்நுட்பமும் முக்கியப்பங்கு வகிக்கும்.

இதன் அடிப்படையில், ஐஓடி படிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. பல்வேறு கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் பிஎஸ்சி, பிஇ, பிடெக் உள்ளிட்ட இளநிலை பட்டப்படிப்புகளோடு இணைந்து ஐஓடி கற்றுக்கொடுக்கப்படுகிறது. கணினி அறிவியல், செயற்கை நுண்ணறிவு, எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பாடப்பிரிவுகளை மையப்படுத்தி பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இப்படிப்பை முடிப்பவர்களுக்கு பன்னாட்டு நிறுவனங்களில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன.

Details about IT courses suitable for future development

முழு கட்டுரையைப் படிக்க →