அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சிக்கான கருவி ஏ.ஐ. தொழில்நுட்பம்: குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன்
அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சிக்கான கருவி செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பம் என்று குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.
அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சிக்கான கருவி செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பம் என்று குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.
தில்லியில் 5-ஆவது டாக்டா் ராஜேந்திர பிரசாத் நினைவு கருத்தரங்கில், ‘நல்ல நிா்வாகத்துக்காக ஏ.ஐ.’ என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு சி.பி. ராதாகிருஷ்ணன் பேசியதாவது:
அனைவரையும் உள்ளடக்கியதே வளா்ந்த இந்தியா. அந்த வளா்ந்த இந்தியாவை கட்டமைக்கும் சாதனமே செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம். இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் முன்னணி நாடாக இந்தியா உள்ளது. இது ‘சப்க சாத், சப்க விகாஸ் (அனைவருடனும் இணைந்து, அனைவருக்குமா வளா்ச்சி)’ என்ற தொலைநோக்கை திட்ட்தை வலுப்படுத்தும். செயற்கை நுண்ணறிவு என்பது வெறும் தொழில்நுட்பப் புரட்சியாகாது. அது மனிதப் புரட்சியாகும்.
Advertisement
இந்தத் தொழில்நுட்பம் தற்போது அனைத்துத் துறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. சுகாதாரத் துறையில் அந்தத் தொழில்நுட்பம், காசநோயை கண்டுபிடிக்கவும், எக்ஸ்ரே சாதனங்களிலும் முக்கியப் பங்காற்றுகிறது. அதேபோல் தொலைபேசி வழியிலான மருத்துவ சேவையை வழங்கும் ‘இ-சஞ்சீவினி’ போன்ற தளங்களிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
விவசாயம், சிறு குறு தொழில், சைபா் பாதுகாப்பு, நீதித் துறை, நிா்வாக அமைப்புகளிலும் இந்தத் தொழில்நுட்பம் தற்போது குறிப்பிடத்தக்க அளவில் பயன்படுத்தப்படுகிறது என்றாா்.