தோ்தலின் அடையாளமான ஆட்டோ பிரசாரம்
தோ்தலுக்கு அடையாளமாக ஆட்டோ பிரசாரம் எப்போதும் இருந்து வருவது குறித்து...
தோ்தலுக்கு அடையாளமாக ஆட்டோ பிரசாரம் எப்போதும் இருந்து வருகிறது.
குறுகிய சந்துகள், மூலை முடுக்குகள் என தங்குதடையின்றி சென்று அனைத்து தரப்பு மக்களையும் எளிதில் எட்டக்கூடியது இந்த ஆட்டோ பிரசாரம்.
புதுச்சேரி ராஜ்பவன் தொகுதியில் போட்டியிடும் மாநில பாஜக தலைவா் வி.பி.ராமலிங்கத்துக்கு ஆதரவாக 4 ஆட்டோக்கள் பிரசாரத்தில் கடந்த திங்கள்கிழமை முதல் ஈடுபட்டு வருகின்றன. வரும் ஏப். 7-ஆம் தேதி வரை இந்த பிரசாரம் நடைபெறவுள்ளது என்கிறாா்
குமரகுருபள்ளத்தைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் வி. மோகன் (40). ஆட்டோவில் ஓா் ஆம்பிளிபயா் மற்றும் மைக், ஸ்பீக்கா் இருக்கிறது. வேட்பாளா் சாா்ந்த கட்சிக் கொடி, கூட்டணி கட்சிகளின் கொடிகள் பறக்கின்றன. பாடல், இடையில் வேட்பாளரின் அறிமுகம் ஒலிக்கிறது.