முகப்பு
தமிழ்நாடு

திமுக இன்று முதல் தீவிர பிரசாரம்!

திமுக இன்று முதல் பிரசாரம் செய்யவுள்ளது தொடர்பாக...

Updated On : 1 பிப்ரவரி, 2026 at 3:40 AM
முதல்வர் ஸ்டாலின் (கோப்புப்படம்)
பகிர்:

தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் ‘தமிழ்நாடு தலைகுனியாது' என்ற பெயரில் திமுக தேர்தல் பிரசாரத்தை இன்று(பிப். 1) தொடங்குகிறது.

முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த ஜன. 20-ஆம் தேதி நடைபெற்ற மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தின் அடிப்படையில், ‘தமிழ்நாடு தலைகுனியாது’ என்ற பிரசாரம் இன்று முதல் தொடங்குகிறது .

இதில், 20 நட்சத்திர பேச்சாளர்களாக தமிழகத்திலுள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், பிப்ரவரி மாதம் முழுவதும் தீவிரமான பிரசாரப் பயணத்தை மேற்கொள்ள இருக்கிறாா்கள்.

ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் ஒரு பொதுக்கூட்டம் நடத்த வேண்டும். ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள முக்கிய பிரமுகர்கள், இளைஞர்கள், மாணவர்கள், தன்னார்வ அமைப்புகள், தொழிற்சங்கங்கள், தொழில்முனைவோர், கல்வியாளர்கள் உள்ளிட்டோரை ஒரே இடத்தில் அழைத்து, மண்டலப் பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் நட்சத்திர பேச்சாளர்கள் அரசின் சாதனைகளை எடுத்துக் கூறியும், அவர்களின் கோரிக்கைகள் குறித்தும் கலந்துரையாடல் மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன், கோவி.செழியன், எம்.பி.க்கள் திருச்சி சிவா, தமிழச்சி தங்கபாண்டியன், எஸ்.ஜெகத்ரட்சகன், கலாநிதி வீராசாமி, கனிமொழி, என்.வி.என்.சோமு, அந்தியூர் ப.செல்வராஜ், இனிகோ இருதயராஜ் எம்எல்ஏ, முன்னாள் எம்.பி.க்கள் ஏ.கே.எஸ்.விஜயன், எம்.எம்.அப்துல்லா, பட்டிமன்ற பேச்சாளார் திண்டுக்கல் ஐ.லியோனி, முன்னாள் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

summary

The DMK is launching its election campaign today (Feb. 1) in all 234 constituencies of Tamil Nadu under the name 'Tamil Nadu will not bow down'.

முழு கட்டுரையைப் படிக்க →