பாஜக 200 தொகுதிகளில் வெற்றி!
பாஜக கட்சி தனிப்பெரும்பான்மையாக 200 தொகுதிகளில் வென்றுள்ளது.
மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்தியளவில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. ஆனாலும், இந்தியா கூட்டணி வேட்பாளர்களும் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று வருகின்றனர்.
தற்போதைய நிலவரப்படி பாஜக கூட்டணியே ஆட்சி அமைக்க உள்ளது. இந்த நிலையில், மக்களவைத் தேர்தல் முடிவுகளில் 203 தொகுதிகளை பாஜக கைப்பற்றியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. (இரவு 10 மணி நிலவரப்படி)
கேரளத்தின் வயநாட்டில் மற்றும் உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரண்டிலும் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.