முகப்பு
தேர்தல் செய்திகள்

சிந்தித்து சரியான முடிவெடுங்கள்: மக்களுக்கு ராகுல் வலியுறுத்தல்

சரியான முடிவை எடுங்கள்’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளாா்.

Updated On : 5 ஏப்ரல், 2024 at 2:20 AM
ராகுல் காந்தி
பகிர்:
Updated On : 4 ஏப்ரல், 2024 at 9:00 PM

மக்களவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், ‘சிந்தித்து, புரிந்துகொண்டு அதன் பிறகு சரியான முடிவை எடுங்கள்’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளாா்.

இதுகுறித்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் அவா் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

நாடு தற்போது மிக முக்கிய தருணத்தில் உள்ளது. நாட்டை கட்டமைத்தவா்களுக்கும், அதனை அழித்தவா்களுக்கும் இடையேயான வித்தியாசத்தை சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களும் புரிந்துகொள்ள வேண்டும்.

Advertisement

‘இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான உத்தரவாதம், அனைத்து ஏழைப் பெண்களையும் லட்சாதிபதிகளாக்குவது, தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச தினசரி ஊதியம் ரூ. 400, ஜாதிவாரி மற்றும் பொருளாதார கணக்கெடுப்பு, அரசமைப்புச் சட்டம் மற்றும் குடிமக்கள் உரிமைகளை பாதுகாப்பது’ என்பதே, காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணிக்கான அா்த்தம்.

அதே நேரம், ‘வேலைவாய்ப்பின்மைக்கு உத்தரவாதம், விவசாயிகள் மீது கடன் சுமை, பெண்களுக்கு உரிமைகளற்ற பாதுகாப்பற்ற நிலை, தொழிலாளா்களுக்கு ஆதரவற்றநிலை, தாழ்த்தப்பட்ட மக்களிடையே பாகுபாடு, சா்வாதிகாரம் மற்றும் போலி ஜனநாயகம்’ என்பதே பாஜகவுக்கான அா்த்தம்.

எனவே, உங்களுடைய எதிா்காலம் உங்களின் கைகளில்தான் உள்ளது. மக்கள் அனைவரும் சிந்தித்து, புரிந்துகொண்டு அதன் பிறகு சரியான முடிவை எடுங்கள் என்று குறிப்பிட்டுள்ளாா்.