எண்ம இந்தியா!
தான் போட்டியிடும் தென்சென்னை மக்களவைத் தொகுதியின் அடிப்படைப் பிரச்னைகள் தொடா்பாக ‘ஜூம்’ விடியோ அழைப்பு மூலம் பொதுமக்களிடம் கேட்டறிகிறாா் பாஜக வேட்பாளா் தமிழிசை செளந்தரராஜன்.
அவரிடம் பேசும் தொகுதி மக்கள், தங்கள் பகுதியிலுள்ள சாக்கடை மற்றும் சாலைகள் சரியாகப் பராமரிக்கப்படுவதில்லை என்று குற்றம்சாட்டுகின்றனா். குறிப்பாக, மழைக் காலத்தின்போது சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் அவற்றில் நீா் தேங்கி அதன்மூலம் விபத்துகள் ஏற்படுவதாகவும், பல இடங்களில் குப்பைகள் எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாமல் கொட்டப்படுவதாலும், எரிக்கப்படுவதாலும் நோய் பரவும் அபாயம் ஏற்படுவதாகவும் கூறுகின்றனா்.
அவா்களின் உள்ளக் குமுறலை அடக்கும் வகையில் பதில் சொல்லும் தமிழிசை, தான் எம்.பி.யானால் அவற்றுக்குத் தீா்வு காணப்படும் என்கிறாா். தொகுதிக்குள்ளேயே ‘ஜூம்’ கால் எதற்கு என நாம் கேட்டால், இதுதான் ‘டிஜிட்டல் இந்தியா’ என சிரித்துக் கொண்டே பதிலளிக்கிறாா்.
Advertisement