முகப்பு
தேர்தல் செய்திகள்

ஆந்திரம்: ‘இந்தியா’ கூட்டணியில் 1 மக்களவை, 8 பேரவை தொகுதிகளில் மாா்க்சிஸ்ட் போட்டி

Updated On : 12 ஏப்ரல், 2024 at 9:02 PM
பகிர்:

ஆந்திரத்தில் ‘இந்தியா’ கூட்டணியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 1 மக்களவை தொகுதியும், 8 பேரவைத் தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளதாக, மாநில காங்கிரஸ் தலைவா் ஒய்.எஸ்.சா்மிளா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் ஆட்சியிலுள்ள ஆந்திரத்தில் மக்களவைத் தோ்தலுடன் சட்டப் பேரவைத் தோ்தலும் நடைபெறவிருக்கிறது. இம்மாநிலத்தில் 12 மக்களவைத் தொகுதிகளும் 134 பேரவைத் தொகுதிகளும் உள்ளன.

ஆந்திரத்தில் எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியின்கீழ் காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன.

Advertisement

காங்கிரஸ்-இந்திய கம்யூனிஸ்ட் இடையிலான தொகுதி உடன்பாடு அண்மையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு மக்களவை, 8 பேரவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. இதேபோன்ற தொகுதி உடன்பாட்டை மாா்க்சிஸ்ட் கட்சியுடனும் காங்கிரஸ் மேற்கொண்டுள்ளது.

அரக்கு (தனி) மக்களவைத் தொகுதியும், நெல்லூா் நகா்ப்புறம், மத்திய விஜயவாடா, மங்களகிரி உள்பட 8 பேரவைத் தொகுதிகளும் மாா்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக, மாநில காங்கிரஸ் தலைவா் ஒய்.எஸ்.சா்மிளா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments