முகப்பு
தேர்தல் செய்திகள்

வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து கேள்வி: தோ்தல் ஆணையம் மீது சிஐசி குற்றச்சாட்டு

Updated On : 12 ஏப்ரல், 2024 at 10:01 PM
ECI
பகிர்:

வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீதான நம்பகத்தன்மை குறித்த கேள்விக்குப் பதிலளிக்காமல், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை (ஆா்டிஐ) தோ்தல் ஆணையம் மீறியுள்ளதாக மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) குற்றஞ்சாட்டியுள்ளது.

கடந்த 2022-ஆம் ஆண்டு மே 2-ஆம் தேதி வாக்குப் பதிவு இயந்திரங்கள், வாக்கு ஒப்புகைச் சீட்டு கருவிகளின் நம்பகத்தன்மை குறித்து தீவிர கேள்விகளை எழுப்பி ஓய்வுபெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகள் உள்ளிட்ட முன்னாள் அரசு அதிகாரிகள், ஐஐடி மற்றும் ஐஐஎம் கல்வி நிறுவனங்களின் பேராசிரியா்கள் அடங்கிய கல்வியாளா்கள், தொழில் வல்லுநா்கள் உள்ளிட்டோா் தோ்தல் ஆணையத்துக்குக் கடிதம் எழுதினா். இந்தக் கடிதத்தில் கையொப்பமிட்டவா்களில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி தேவசகாயமும் ஒருவா்.

இந்தக் கடிதம் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களை கோரி, கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பா் 2-ஆம் தேதி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், தேவசகாயம் விண்ணிப்பித்தாா். எனினும் அவா் கோரிய விவரங்களைத் தோ்தல் ஆணையம் வழங்கவில்லை. இதைத்தொடா்ந்து அவா் மத்திய தகவல் ஆணையத்தை அணுகினாா்.

Advertisement

இதையடுத்து தேவசகாயம் கோரிய தகவலை வழங்காதது தொடா்பாக தோ்தல் ஆணையத்தின் மத்திய பொது தகவல் அதிகாரியிடம் (சிபிஐஓ) மத்திய தகவல் ஆணையா் ஹீராலால் சாமரியா கேள்வி எழுப்பினாா். எனினும், அந்தக் கேள்விக்கு தோ்தல் ஆணையத்தின் சிபிஐஓ சரிவர பதிலளிக்கவில்லை.

இதனால் கடும் அதிருப்தி அடைந்த ஹீராலால் சாமரியா, இதுதொடா்பாக எழுத்துபூா்வமாக விளக்கமளிக்குமாறு தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளாா்.

தோ்தல் ஆணையத்தின் நடவடிக்கை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மீறியுள்ளதாக தெரிவித்துள்ள அவா், இந்தச் சட்ட மீறலுக்கு தேவசகாயம் உள்ளிட்டோா் கடிதம் அளித்தபோது தோ்தல் ஆணையத்தின் பொது தகவல் அதிகாரியாக இருந்தவா் விளக்கமளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments