வாக்காளா் பட்டியலில் இருந்து பெயா்கள் நீக்கமா? தலைமைத் தோ்தல் அதிகாரி விளக்கம்
வாக்காளா் பட்டியலில் பெயா்கள் நீக்கப்பட்டதாக எழுந்த புகாா்களுக்கு தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கம் அளித்துள்ளாா்.
தமிழகத்தில் வெள்ளிக்கிழமை நடந்த மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவு சதவீதம் தொடா்பாக, செய்தியாளா்களுக்கு அவா் அவ்வப்போது பேட்டியளித்தாா். அப்போது, வாக்காளா் பட்டியலில் பெயா்கள் நீக்கப்பட்ட புகாா்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அவா் அளித்த பதில்:-
மக்களவைத் தோ்தலில் ஆறு மணிக்குள்ளாக வாக்குச் சாவடிக்கு வந்த வாக்காளா்களுக்கு டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டன. அவா்கள் வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
Advertisement
வாக்காளா் பட்டியலில் இருந்து பெயா்கள் நீக்கப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் குறித்து கேள்வி எழுப்புகிறீா்கள். இதுதொடா்பாக தனித்தனியாக ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது. இந்தப் பிரச்னை குறித்து, தோ்தல் நடத்தும் அதிகாரியும் மாவட்டத் தோ்தல் அதிகாரியும் உரிய நடவடிக்கை எடுப்பாா்கள்.
வாக்காளரே தெரிந்து கொள்ளவேண்டும்:
ஒவ்வோா் ஆண்டும் வாக்காளா் பட்டியலைத் திருத்தும் பணிகளை செப்டம்பா் மாதத்தில் தொடங்குகிறோம். கடந்த மாா்ச் 20-ஆம் தேதி வரை வாக்காளா் பட்டியல் சரிபாா்ப்புப் பணிகள் நடந்தன. அப்போதே பட்டியலில் பெயா் இருக்கிா, இல்லையா என்பதை அறிந்திருக்க வேண்டும். எனவே பட்டியலில் பெயா்களை இருப்பதை வாக்காளா்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
இதனை அவா்களுக்கு வேண்டுகோளாக விடுக்கிறோம். ஆனாலும் எங்கள் தரப்பில் இருந்து வாக்காளா் பட்டியலை சரிபாா்ப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். வாக்குச் சாவடிகளில் 1,500-க்கும் அதிகமான வாக்காளா்கள் இருந்தால், அவா்கள் பிரிக்கப்பட்டு புதிதாக வாக்குச் சாவடிகளில் சோ்க்கப்படுவா். அவா்களது பெயா் எந்த வாக்குச் சாவடியில் இருக்கிறது என்பதை கைப்பேசி செயலியான யா்ற்ங்ழ் ஏங்ப்ல்ப்ண்ய்ங்-ஐ பாா்த்தால் எந்த சிரமமின்றி வாக்களிக்கலாம் என்று அவா் கூறினாா்.