தேர்தல் செய்திகள்

அருணாச்சல், சிக்கிமில் ஆட்சியை தக்கவைக்கும் ஆளும் கட்சிகள்: வெற்றி நிலவரம்!

அருணாச்சல் பிரதேசம், சிக்கிம் வாக்கு எண்ணிக்கை - காலை 12 மணி நிலவர முன்னணி மற்றும் வெற்றி நிலவரம்!

DIN

அருணாச்சல் பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலங்களில் ஆளும் கட்சிகள் ஆட்சியை தக்கவைத்து கொள்கின்றன.

அருணாச்சல் பிரதேசம் மற்றும் சிக்கிம் பேரவைகளின் பதவிக்காலம் ஜூன் 2ஆம் தேதியே நிறைவு பெறுவதால், முன்கூட்டியே வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.

இவ்விரு மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணும் பணி இன்று(ஜூன் 2) காலை 6 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

அருணாச்சலில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் முதல்வர் பீமா காண்டு உள்பட 10 பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றி ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து மீதமுள்ள 50 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

அதன்படி, அருணாச்சல் பிரதேசத்தில் தற்போதைய நிலவரப்படி பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால், மீண்டும் பீமா காண்டு மீண்டும் முதல்வர் ஆவார் என்று கூறப்படுகிறது.

சிக்கிமில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் அதன் தலைவர் பிரேம் சிங் தமாங் மீண்டும் முதல்வர் ஆகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

காலை 12 மணி நிலவரப்படி, அருணாச்சல் பிரதேசம் (மொத்த தொகுதிகள் 60) வாக்கு எண்ணிக்கை - முன்னணி மற்றும் வெற்றி நிலவரம்:

பாஜக --> 30 இடங்களில் வெற்றி, 15 இடங்கள் முன்னிலை

என்பிபி --> 2 இடங்களில் வெற்றி, 3 இடங்கள் முன்னிலை

காங்கிரஸ் --> 0

இதர கட்சிகள் --> 5

சிக்கிம் (மொத்த தொகுதிகள் 32) வாக்கு எண்ணிக்கை - முன்னணி மற்றும் வெற்றி நிலவரம்:

எஸ்.கே.எம் --> 16 இடங்களில் வெற்றி 15 இடங்கள் முன்னிலை

எஸ்.டி.எஃப் --> 1

பாஜக --> 0

காங்கிரஸ் --> 0

இதர கட்சிகள் --> 0

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐபிஎல்: விடைபெற்றாா் அஸ்வின்

பிரக்ஞானந்தா மீண்டும் ‘டிரா’ - பதக்க வாய்ப்பை இழந்தாா் குகேஷ்

2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள்: இந்தியாவின் விருப்பத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சிந்து

ஜவுளி ஏற்றுமதிக்கு 40 நாடுகளில் வாய்ப்பு: வர்த்தக அமைச்சகம்

SCROLL FOR NEXT