தேர்தல் செய்திகள்

அபார வெற்றிக்குக் காத்திருக்கும் ராகுல் காந்தி!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

DIN

மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்தியளவில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. ஆனாலும், இந்தியா கூட்டணி வேட்பாளர்களும் குறைவான வாக்குகள் வித்தியாத்திலேயே பின்னடைவில் இருப்பதால், ஆட்சியைக் கைப்பற்றுவது யார்? என்னும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கேரளத்தின் வயநாட்டில் மற்றும் உத்தப்பிரதேசத்தின் ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரண்டிலும் முன்னிலை வகித்து வருகிறார்.

குறிப்பாக, வயநாட்டில் 2,22,000 வாக்குகள் வித்தியாசத்திலும் ரேபரேலி தொகுதியில் 1,64,400 வாக்குகள் வித்தியாசத்திலும் முன்னிலையில் இருக்கிறார் (12.30 மணி நிலவரப்படி).

இதனால், இந்த இரு தொதிகளிலும் ராகுல் காந்தியின் வெற்றி உறுதியாகிவிட்டதால் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒடிஸாவில் இருந்து உதகைக்கு கஞ்சா கடத்தி வந்த இளைஞா் கைது

வீடு வீடாக வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி: ஆட்சியா் ஆய்வு

காங்கேயம் கல்வி நிறுவனத்தில் ரூ.1.33 கோடி மதிப்பில் கல்வி ஊக்கத் தொகை

காங்கயம், உடுமலையில் இன்று மின்பயனீட்டாளா்கள் குறைதீா் கூட்டம்

பவானிசாகா் அணையின் நீா்மட்டம் 103 அடியை நெருக்குகிறது

SCROLL FOR NEXT