இந்த தேர்தலின் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 தொகுதிகளில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை பெற்றுள்ளது.
பாஜகவுக்கு எதிரான கட்சிகள் ஒன்றிணைந்து ’இந்தியா’ என்ற பெயரில் உருவான கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி அடைந்துள்ளது.
பாஜக 240 தொகுதிகளிலும் காங்கிரஸ் 99, சமாஜவாதி 39, திரிணமூல் காங்கிரஸ் 29, திமுக 21, தெலுங்கு தேசம் 16 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை 272 தொகுதிகளில் எந்தக் கட்சியும் வெற்றி பெறாததால், தனித்து ஆட்சி அமைக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. மேலும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு பாஜகவுக்கு ஆதரவாக உள்ளார்.
இந்த நிலையில், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு 2019 ஆம் ஆண்டு தன் எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி குறித்து பதிவிட்டது தற்போது வைரலாகி வருகிறது.
அப்பதிவில், “மோடி இந்தியாவின் மதிப்புமிக்க நிறுவனங்களை திட்டமிட்டு அழித்துவிட்டார். பாஜக ஆட்சியில் நிறுவன சுயாட்சியும், ஜனநாயகமும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. சிபிஐ-யிலிருந்து ரிசர்வ வங்கி வரை, அரசியலமைப்பு அதிகாரம் கொண்ட தேர்தல் ஆணையம் கூட இதிலிருந்து விடுபடவில்லை” எனக் குறிப்பிட்டிருந்தார்.
தற்போது, பிரதமர் மோடிக்கு, சந்திரபாபு நாயுடு ஆதரவளிக்கவுள்ள நிலையில், இப்பதிவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.