முகப்பு
தமிழ்நாடு

சிங்கத் தமிழர் முன்னேற்றக் கழகத்திற்கு மணச்சநல்லூர் தொகுதி ஒதுக்கீடு

அதிமுக கூட்டணியில் சிங்கத் தமிழர் முன்னேற்றக் கழகத்திற்கு மணச்சநல்லூர் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 மார்ச், 2026 at 11:12 AM
அதிமுக தலைமை அலுவலகம் - கோப்புப் படம்
பகிர்:

அதிமுக கூட்டணியில் சிங்கத் தமிழர் முன்னேற்றக் கழகத்திற்கு மணச்சநல்லூர் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அக்கட்சி, தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்.23-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதற்கான வேட்புமனுத் தாக்கல் மாா்ச் 30-ஆம் தேதி தொடங்கி ஏப்.6-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் திமுக தலைமையில் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியும், அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியும் தோ்தலில் களம் காண்கின்றன.

இவை தவிர நாம் தமிழா் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் போன்ற கட்சிகளும் தோ்தலில் தனித்துப் போட்டியிடுகின்றன.

தேர்தலுக்கு இன்னும் 26 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகிறது. எதிர்கட்சியான அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதியை பங்கீட்டு வழங்கி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.