ஒரே தொகுதியில் 9-ஆவது முறையாக போட்டியிடும் அமைச்சர்!
ஒரே தொகுதியில் 9-ஆவது முறையாக போட்டியிடும் அமைச்சர்...
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் பேரவைத் தொகுதியில் அமைச்சர் இ பெரியசாமி 9-ஆவது முறையாக போட்டியிடுகிறார்.
இவர் இந்தத் தொகுதியில் 1989-ஆம் ஆண்டு முதல் முறையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து 1991, 1996. 2001, 2006, 2011. 2016. 2021 8 முறை போட்டியிட்ட இவருக்கு மீண்டும் 2026 தேர்தலிலும் வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.
இதில் 1991, 2001 ஆகிய இரு தேர்தல்களில் வெற்றி வாய்ப்பை இழந்த இவர், கடந்த 2021 தேர்தலில் தமிழகத்திலேயே அதிகபட்சமாக 1.35 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றார். இவர் வெற்றி பெற்றதன் மூலம் 1996, 2006, 2021 என 3 முறை அமைச்சர் தொகுதி என்ற சிறப்பு ஆத்தூருக்கு கிடைத்தது. கடந்த 2021 தேர்தலில் பாமக வேட்பாளரை வென்ற பெரியசாமி, இந்த முறை அதிமுக வேட்பாளரை எதிர் கொள்கிறார்.
- ஆ.நங்கையார் மணி.