விஜய்க்கு ஜனநாயகன் தயாரிப்பு நிறுவனம் வாழ்த்து!
தவெக தலைவர் விஜய்க்கு ஜனநாயகன் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் வாழ்த்து தெரிவித்துள்ளது.
தவெக தலைவர் விஜய்க்கு ஜனநாயகன் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் வாழ்த்து தெரிவித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வருகின்றன. இதில், விஜய்யின் தவெக பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வியடைந்த நிலையில் தவெக தலைவர் விஜய் போட்டியிட்ட பெரம்பூர், திருச்சி கிழக்கு போன்ற இரு தொகுதிகளிலும் வெற்றிபெற்றது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, விஜய்க்கு பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வரும் நிலையில் ஜனநாயகன் படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது.
கேவிஎன் தயாரிப்பு நிறுவனத் தலைவர் வெங்கட் கே நாராயணா தனது எக்ஸ் தளப் பதிவில், ”அனைத்துத் தடைகளையும் மீறி வெற்றிபெற்ற ஜனநாயகன் தளபதி விஜய் சாருக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். இது உண்மையிலேயே மிகப்பெரிய புரட்சி. வரும் தலைமுறைகளிலும் இது எதிரொலிக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.
ஜனநாயகன் திரைப்படம் சென்சார் பிரச்னை காரணமாக வெளியாவது தள்ளிப்போனதைத் தொடர்ந்து சில வாரங்களுக்கு முன் இணையத்தில் கசிந்தது. இதனால், படத்தின் வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் இன்று வாழ்த்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Jananayagan Production Company congratulates Vijay
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.