தவெக தலைவர் விஜய்க்கு பிரதமர் மோடி வாழ்த்து!
தவெக தலைவர் விஜய்க்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தது தொடர்பாக..
தவெக தலைவர் விஜய்க்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இதுவரை வெளியான முடிவுகளில் 107 தொகுதிகளில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றுள்ளது.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”தவெகவின் ஈர்க்கக்கூடிய செயல்திறனுக்கு எனது பாராட்டுகள்.
Advertisement
Advertisement
தமிழகத்தின் முன்னேற்றத்துக்காகவும் மக்களின் நலனுக்காகவும் அனைத்து விதத்திலும் மத்திய அரசு ஆதரவு வழங்கும்.
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி. மக்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதிலும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும் நாங்கள் எப்போதும் முன்னணியில் இருப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இது தொடர்பாக பிரதமர் மோடி, “புதுவையைச் சேர்ந்த நமது தேசிய ஜனநாயக் கூட்டணி தொண்டர்கள், களத்தில் ஆற்றிய சிறப்பான பணிகளுக்காக நான் பெருமை அடைகிறேன்.
அவர்கள் தொடர்ந்து மக்களுடனேயே இருந்து, நமது தொலைநோக்குச் சிந்தனையையும் சாதனைகளையும் விரிவாக எடுத்துரைத்தனர். இதுவே, மக்கள் மீண்டும் ஆட்சிக்கு வர ஆசி வழங்கியதை உறுதி செய்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுபோல கேரளம், அஸ்ஸாம், மேற்கு வங்கத்தில் வெற்றி பெற்றவர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Prime Minister Narendra Modi has extended his wishes to TVK leader Vijay.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.