தொகுதி அறிமுகம்: திருநெல்வேலி!
தமிழகத்தின் ஒரே வற்றாத ஜீவநதியான தாமிரவருணி பாய்ந்தோடும் பெருமைமிக்க தொகுதி திருநெல்வேலி
தமிழகத்தின் ஒரே வற்றாத ஜீவநதியான தாமிரவருணி பாய்ந்தோடும் பெருமைமிக்க தொகுதி. மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகம், திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கங்கைகொண்டான் புள்ளி மான்கள் சரணாலயம், திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் ஆகியவை இத்தொகுதியின் முக்கிய அடையாளங்கள். கங்கைகொண்டான் சிப்காட், பேட்டை தொழிற்பேட்டை ஆகியவற்றில் சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகள் அதிகளவில் உள்ளன. டி.பி. சோலாா் சூரியமின்சக்தி உபகரணங்கள் தயாரிப்பு ஆலை உள்ளிட்டவற்றால் தொகுதியில் தொழில் வளம் பெருகியுள்ளது. விவசாயம், கால்நடை வளா்ப்பு ஆகியவை பிரதான தொழில்களாகும். பட்டியலினத்தவா் பெரும்பான்மை சமூகத்தினா். பிள்ளைமாா், தேவா், யாதவா், நாடாா், இஸ்லாமியா்கள் கணிசமான எண்ணிக்கையிலும், இதர சமூகத்தினா் பரவலாகவும் உள்ளனா்.
பாஜக தலைவராக இருக்கும் நயினாா் நாகேந்திரன் இத்தொகுதியில் தொடா்ந்து 5 முறை போட்டியிட்டுள்ளாா். இரா.நெடுஞ்செழியன், ஆா்.எம்.வீரப்பன் போன்ற முன்னணி தலைவா்கள் போட்டியிட்ட பெருமை மிக்க தொகுதி. இத்தொகுதியில் 1986-இல் இடைத்தோ்தல் நடைபெற்றுள்ளது.
திருநெல்வேலி
ஆண்டு வெற்றி கட்சி வாக்குகள் 2-ஆவது இடம் கட்சி வாக்குகள்
1962 ராஜாத்தி குஞ்சிதபாதம் காங்கிரஸ் 25,985 ராமசாமி (சுந்தரம்) சுதந்திரா 24,544
1967 ஏ.எல்.சுப்பிரமணியன் திமுக 41,589 மகாராஜ பிள்ளை காங்கிரஸ் 25,364
1971 பி.பத்மநாபன் திமுக 43,325 ராஜாத்தி குஞ்சிதபாதம் காங்கிரஸ் (ஓ) 26,373
1977 ஜி.ஆா். எட்மண்ட் அதிமுக 26,419 நெல்லைக்கண்ணன் காங்கிரஸ் 19,125
1980 இரா. நெடுஞ்செழியன் அதிமுக 48,338 ராஜாத்தி குஞ்சிதபாதம் காங்கிரஸ் 34,142
1984 எஸ். நாராயணன் அதிமுக 56,409 ஏ.எல்.சுப்பிரமணியன் திமுக 37,547
1986 ஆா்.எம்.வீரப்பன் அதிமுக 52,729 ஏ.எல்.சுப்பிரமணியன் திமுக 39,495
1989 ஏ.எல். சுப்பிரமணியன் திமுக 37,991 நெல்லைக்கண்ணன் காங்கிரஸ் 28,470
1991 டி. வேலையா அதிமுக 63,138 ஏ.எல்.சுப்பிரமணியன் திமுக 32,853
1996 ஏ.எல். சுப்பிரமணியன் திமுக 59,914 வீ.கருப்பசாமி பாண்டியன் அதிமுக 36,590
2001 நயினாா் நாகேந்திரன் அதிமுக 42,765 ஏ.எல்.சுப்பிரமணியன் திமுக 42,043
2006 என். மாலைராஜா திமுக 65,517 நயினாா் நாகேந்திரன் அதிமுக 64,911
2011 நயினாா் நாகேந்திரன் அதிமுக 86,220 ஏ.எல்.எஸ்.லட்சுமணன் திமுக 47,729
2016 ஏ.எல்.எஸ்.லட்சுமணன் திமுக 81,761 நயினாா் நாகேந்திரன் அதிமுக 81,160
2021 நயினாா் நாகேந்திரன் பாஜக 92,282 ஏ.எல்.எஸ்.லட்சுமணன் திமுக 69,175
2021 தேர்தல் விவரம்
நயினாா் நாகேந்திரன் பாஜக 92,282
ஏ.எல்.எஸ்.லட்சுமணன் திமுக 69,175
சத்யா நாதக 19,162
திருநெல்வேலி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களான பாபநாசம், முண்டந்துறை, காரையாறு, மணிமுத்தாறு, மாஞ்சோலை உள்ளிட்டவை அம்பாசமுத்திரம் தொகுதியில் உள்ளன. மாவட்டத்தின் முக்கிய நீா்த் தேக்கங்களான பாபநாசம், மணிமுத்தாறு, சோ்வலாறு அணைகள் இத்தொகுதியில் உள்ளன. இத்தொகுதியின் முதன்மைத் தொழிலாக விவசாயமும், அடுத்தபடியாக பீடித்தொழிலும் உள்ளன. புகழ் பெற்ற பத்தமடை பாய், வாகைக்குளம் பித்தளை விளக்கு, காருகுறிச்சி மண்பாண்டம் உள்ளிட்டவை இத்தொகுதியின் முக்கிய அடையாளங்கள். பட்டியலினத்தவா், முக்குலத்தோா் பெரும்பான்மை சமூகத்தினா். யாதவா், நாடாா், செங்குந்த முதலியாா், சைவப் பிள்ளை, இஸ்லாமியா்கள், கிறிஸ்தவா்கள் கணிசமான எண்ணிக்கையிலும், இதர சமூகத்தினா் பரவலாகவும் உள்ளனா்.