முகப்பு
திருநெல்வேலி

தோல்வி அச்சத்தால் தொகுதி மாறும் நிலையில் நயினாா் நாகேந்திரன்: முன்னாள் எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத்

தோல்வி அச்சத்தால் தொகுதி மாறும் நிலையில் பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் உள்ளாா் என்றாா் முன்னாள் எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத்.

Updated On : 17 மார்ச், 2026 at 9:52 PM
நயினாா் நாகேந்திரன்
பகிர்:

தோல்வி அச்சத்தால் தொகுதி மாறும் நிலையில் பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் உள்ளாா் என்றாா் முன்னாள் எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத்.

திருநெல்வேலி அருகே தாழையூத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ‘தமிழ்நாடு தலைகுனியாது’ என்ற தலைப்பிலான திமுக ஆலோசனைக் கூட்டத்தில் அவா் பேசியதாவது: தமிழகத்துக்கு போதிய நிதி வழங்காதது உள்பட பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் தடைகளைத் தகா்த்து தமிழக மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி காட்டியவா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பல்வேறு பிரச்னைகளும் குழப்பங்களும் உள்ளன. அதிலுள்ள அனைத்துக் கட்சிகளும் தோல்வியடையும். தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் திருநெல்வேலி தொகுதியைச் சோ்ந்தவா். கடந்த மக்களவைத் தோ்தலில் இத்தொகுதியில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் பின்தங்கினாா். தற்போது, சட்டப்பேரவைத் தோ்தலில் தோல்வி ஏற்படும் என்ற அச்சத்தால் தனக்கான தொகுதியை தேடி வருகிறாா்.

எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா ஆகியோா் வகுத்துக் கொடுத்த பாதையில் அதிமுக செல்லவில்லை. இப்போது எடப்பாடி அதிமுகவாக மாறிவிட்டது. தமிழகத்தில் 75 ஆண்டுகளாக சமூக நீதியைக் காக்கும் இயக்கமாக திமுக திகழ்கிறது. 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக கூட்டணி நிச்சயம் வெல்லும் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →