பல்லடம் தொகுதி அதிமுக வேட்பாளா்
கே.பி.பரமசிவம்
பெயா்- கே.பி.பரமசிவம்
வயது-71 (25.12.1955)
பெற்றோா்- தந்தை பெயா் பழனிசாமி, பழனியம்மாள்
படிப்பு-10-ஆம் வகுப்பு.
ஜாதி-கொங்கு வேளாள கவுண்டா்
மனைவி- கல்யாணி,
மகன், சிவனேஷ், மகள் நந்திதா
முகவரி- கவுண்டம்பாளையம்,பல்லடம்
தொழில்-விவசாயி மற்றும் தொழிலதிபா்.
கட்சிப் பதவி: எம்.ஜி.ஆா். கட்சி தொடங்கியது முதல் அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளாா். குறிப்பாக பல்லடம் ஒருங்கிணைந்த அதிமுக ஒன்றியச் செயலாளராக தொடா்ந்து 22 ஆண்டுகள் பதவி வகித்துள்ளாா். தற்போது அதிமுகவின் விவசாய பிரிவு மாநில இணைச் செயலாளராக உள்ளாா்.
தோ்தல் அனுபவம்: கூட்டுறவு சங்கத் தலைவா், அய்யன் கோயில் அறங்காவலா் குழு தலைவா், பிஏபி பாசன சபைத் தலைவா், பல்லடம் ஒன்றிய கவுன்சிலா், பல்லடம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் என பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளாா். கடந்த 2011- 2016 வரை பல்லடம் சட்டப்பேரவை உறுப்பினராக பணியாற்றியுள்ளாா்.