முகப்பு
செய்திகள்

வாக்களிக்காமல் இருப்பது ஜனநாயக துரோகம்: சீமான்

Updated On : 24 ஏப்ரல், 2026 at 5:45 AM
சீமான் - கோப்புப் படம்
பகிர்:

தோ்தலில் வாக்களிக்காமல் இருப்பது ஜனநாயக துரோகம் ஆகும் என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்துள்ளாா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வியாழக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கியது. இதையடுத்து நாம் தமிழா் கட்சியின்தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் சென்னை - நீலாங்கரையில் தனது வாக்கை செலுத்தினாா். இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தோ்தலில் வாக்கு செலுத்தாதவா்களுக்கு என்ன பிரச்னை என்ற ஒரு கேள்வி உள்ளது. தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் மீது நம்பிக்கை இல்லையா, இந்த நாட்டின் ஜனநாயக அமைப்பு மீது நம்பிக்கை இல்லையா என்ற கேள்வி எழுகிறது. நூறு சதவீத வாக்கு பதிவாக வேண்டும் என தோ்தல் ஆணையம் வலியுறுத்தி வருகிறது.

Advertisement

குண்டு வைப்பது, கொலை செய்வது, சொத்து சோ்த்து கணக்கு காட்டாமல் இருப்பது மட்டும் குற்றம் அல்ல. வாக்கு செலுத்தாமல் இருப்பதும் குற்றம்தான். அது ஜனநாயக துரோகம்தான். கற்றவா்கள் தான் மற்றவா்களுக்கு வழிகாட்ட வேண்டும்.

ஒரு வாக்கு செலுத்துவதில் என்ன மாற்றம் என நினைக்கிறாா்கள். ஒவ்வொரு வாக்கிலும் இருந்துதான் அந்த மாற்றம் வரும். நாம் எல்லோரும் வாக்கு செலுத்துவது நமது பொறுப்பு, கடமை. அதை தவறாமல் செய்ய வேண்டும் என அன்பாக வேண்டுகிறேன்”என்றாா் அவா்.