வேலைவாய்ப்பு

டெக்கான் கிராமிய வங்கியில் அலுவலக உதவியாளர் பணி

டெக்கான் கிராமிய வங்கியில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து

தினமணி

டெக்கான் கிராமிய வங்கியில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: Deccan Grameena Bank

காலியிடங்களின் எண்ணிக்கை: 198

பதவி மற்றும் காலியிடங்கள் விவரம்:

1. Officer Scale-III - 04

2. Officer Scale-II (General Banking ) - 13

3. Officer Scale-II (IT) - 04

4. Officer Scale-II (Law) - 01

5. Officer Scale-II (Treasury Manager) - 01

6. Officer Scale-II (Marketing )- 01

7. Officer Scale-II (Agricultural)- 02

8. Officer Scale-I - 61

9. Office Assistant (Multipurpose) - 111

கல்வித்தகுதி:

Officer Scale-III பணிக்கு ஏதாவதொரு துறையில் பட்டமும், மாநிலம் உத்தியோகபூர்வ மொழி திறமையும் பெற்றிருக்க வேண்டும்.

அனைத்து Officer Scale-II பணிக்கும்  எலக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, சட்டம், விவசாயம், தோட்டக்கலை, பால், கால்நடை பராமரிப்புத்துறை, வனவியல், கால்நடை அறிவியல் அல்லது அதன் சமமான சிஏ அல்லது எம்பிஏ நிதியியல் முடித்திருக்க வேண்டும்.

Officer Scale-I பணிக்கு ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Office Assistant (Multipurpose)பணிக்கு ஏதாவதொரு துறையில் பட்டம் மற்றும் அந்தந்த மாநிலம் உத்தியோகபூர்வ மொழி திறமையும் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 - 40க்குள் இருக்க வேண்டும். இவை பணி வாரியாக மாறுபடும்.

தேர்வு செய்யப்படும் முறை: 2013 செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெற்ற IBPS போட்டி தேர்வின்  மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்முகத் தேர்வு அழைக்கப்பட்டு தகுதியானவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி பிரிவினருக்கு ரூ.100. SC,ST மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.20.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.dgbhyd.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை எதிர்கால பயன்பாட்டுக்காக பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.09.2014

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 04.10.2014

மேலும் விண்ணப்பதாரர்களின் சந்தேகங்களுக்கும் முழுமையான விவரங்களும் http://www.dgbhyd.com/adminpanel/tender/Advertisement%20for%20Interviews.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காந்தி பெயரைக் காக்கவோ, மீட்கவோ வேண்டிய அவசியம் இல்லை! கமல்

”முட்டையில் புற்றுநோய் ஏற்படுத்தும் கெமிக்கல்?” மத்திய உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை!

தில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு: பாதிக்கப்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.10,000 இழப்பீடு!

தங்கம், வெள்ளி விலை மீண்டும் உயர்வு! இன்றைய நிலவரம்!

கோவை விமான நிலையத்துக்குள் தவெக தொண்டர்கள் நுழையத் தடை!

SCROLL FOR NEXT