வேலைவாய்ப்பு

விளையாட்டு வீரர்களுக்கு கிழக்கு ரயில்வேயில் பணி

கிழக்கு ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கான பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆர். வெங்கடேசன்

கிழக்கு ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கான பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்:  E890/2/R&R/Sports (Open Market) 2015-16

வயதுவரம்பு: 01.01.2016 தேதியின்படி 18 -25க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும் அல்லது ஏதாவதொரு தொழில் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

விளையாட்டு தகுதிசள்: ஏதாவதொரு விளையாட்டு விளையாட்டு பிரிவில் தேசிய அளவில், மாநி அளவில், பல்கலைக்கழக அளவில், மண்டல அளவில் நடத்தப்படும் போட்டியில் கலந்து கொண்டு முதல் மூன்று இடங்களுக்குள் முன்னேறி இருக்க வேண்டும். 01.04.2013-க்கு பிறகு ஏற்படுத்தப்பட்ட விளையாட்டு சாதனைகள் மட்டும் கருத்தில் கொள்ளப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: விளையாட்டுத் திறமை மற்றும் உடற்தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானாவர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வின்போது சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை  FA & CAO, Eastern Railway, Kolkata என்ற பெயருக்கு டிடி, ஐபிஓ ஆக எடுத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.er.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் கெஜட்டெட் அதிகாரியால் அட்டெஸ்ட் பெற்று இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 16.12.2015

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Chief Personnel Officer, Eastern Railway Headquarters,

Eastern Railway Sports Association (ERSA) Office, 17, Netaji Subhas Road, Fairlie Place, Kolkata - 700001.

மேலும் விவரங்கள் அறிய www.er.indianrailways.gov.in  என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

SCROLL FOR NEXT