வேலைவாய்ப்பு

வானொலியில் அறிவிப்பாளர் பணி: தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

பகுதி நேர அறிவிப்பாளர் தேர்வு விரைவில் நடைபெற உள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.  பண்பலை ஒலிபரப்புக்கு 25 வயதிலிருந்து 35 வயதுக்குள்பட்டராகவும்,

கு. வைத்திலிங்கம்

திருச்சி வானொலி நிலையத்தின் முதல் அலைவரிசை மற்றும் வானவில் பண்பலையில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்க பகுதி நேர அறிவிப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

பகுதி நேர அறிவிப்பாளர் தேர்வு விரைவில் நடைபெற உள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.  பண்பலை ஒலிபரப்புக்கு 25 வயதிலிருந்து 35 வயதுக்குள்பட்டராகவும், முதல் அலைவரிசைக்கு 25 வயதிலிருந்து 50 வயதுக்குள்பட்டரவாகவும் இருக்க வேண்டும்.

இலக்கியம், உலக நடப்பில்  நாட்டம் உள்ளராகவும், வானொலிக்கு ஏற்ற குரல் வளமும், உச்சரிப்பும் உடையவராக இருக்க வேண்டும். முறையான விண்ணப்பம் படிவம் பெற விரும்புவோர் தங்களைப் பற்றிய விவரத்தை எழுதி அனுப்பவேண்டும்.

குரல் தேர்வுக்கும், தேர்வில் வென்றால் வாணி  சான்றிதழுக்கான பயிற்சிக் கட்டணத்தை செலுத்த வேண்டும். குரல் தேர்வுக்கான விண்ணப்பப் படிவம் பெறுவதற்கான தன் விவரக் கடிதம் திருச்சி வானொலி நிலையத்துக்கு இம்மாதம் 28-ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ. 5,000 உரிமைத் தொகை, தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவையில் அனுமதி!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

SCROLL FOR NEXT