முகப்பு
வேலைவாய்ப்பு

அரசு ஐடிஐ.,யில் பணிமனை உதவியாளர் பணிக்கு நவ.20 வரை விண்ணப்பிக்கலாம்

அருப்புக்கோட்டை அரசு தொழிற பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) பணிமனை உதவியாளர் பணிக்கு இம்மாதம் 20-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் வே.ராஜாராமன் தெரிவித்துள்ளார்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:28 AM
பகிர்:

அருப்புக்கோட்டை அரசு தொழிற பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) பணிமனை உதவியாளர் பணிக்கு இம்மாதம் 20-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் வே.ராஜாராமன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:அருப்புக்கோட்டையில் உள்ள அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் பணிமனை உதவியாளர் பணியிடங்களை இனச்சுழற்சி அடிப்படையில் நேரடி நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. லிப்ட் மெக்கானிக், கம்மியர் குளிர்பதனம் மற்றும் தட்பவெப்பநிலை கட்டுப்படுத்துதல் (எம்.ஆர்.ஏசி) ஆகிய பிரிவுகளுக்கு பணிமனை உதவியாளர் நியமிக்கப்படவுள்ளனர்.

இதில் லிப்ட் மெக்கானிக் பிரிவுக்கு அருந்ததியர் பெண்கள் விண்ணப்பிக்கலாம். கம்மியர் குளிர்பதனம் மற்றும் தட்டபவெட்பநிலை கட்டுப்படுத்துதல் (எம்.ஆர்.ஏசி) பிரிவுக்கு எம்.பி.சி/டி.என்.சி. பிரிவில் முன்னுரிமையற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.1.7.2015 அன்று எஸ்.சி. பிரிவினர்க்கு 18 முதல் 35 வயது வரையும், எம்.பி.சி. பிரிவினருக்கு 32 வயது வரையும், இதர பிரிவினருக்கு 30 வயது வரையும் தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அரசு ஆணைப்படி தகுதியானோருக்கு வயது விலக்கு அளிக்கப்படும். 10-ம் வகுப்பு தேர்ச்சி, தொழில் நுட்பக் கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தகுதியானோர் பெயர், பொது கல்வித் தகுதி, தொழில் நுட்பக் கல்வி, இனம், மதம், முன் அனுபவ விவரம், வீட்டு முகவரி, செல்லிடைப்பேசி எண் ஆகிய விவரங்களைப் பூர்த்தி செய்து விண்ணப்பமாக அளிக்க வேண்டும்.

இம்மாதம் 20-ம் தேதி மாலை 5 மணிக்குள் அருப்புக்கோட்டையில் உள்ள அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்திற்கு தபாலிலோ அல்லது நேரிலோ விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டும். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியானோருக்கு நேர்காணலுக்கு அழைப்பு அனுப்பப்படும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →