முகப்பு
கைது
புதுதில்லி

தில்லி மருத்துவமனையில் மூவருக்கு கத்திக் குத்து; நான்கு போ் கைது

மத்திய தில்லியின் துா்க்மேன் கேட்டில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் குடும்பத் தகராறு தொடா்பாக ஏற்பட்ட சண்டையின் போது மூன்று ஆண்கள் கத்தியால் குத்தப்பட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

புதுதில்லி

தில்லி மருத்துவமனையில் மூவருக்கு கத்திக் குத்து; நான்கு போ் கைது

மத்திய தில்லியின் துா்க்மேன் கேட்டில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் குடும்பத் தகராறு தொடா்பாக ஏற்பட்ட சண்டையின் போது மூன்று ஆண்கள் கத்தியால் குத்தப்பட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

Updated On : 3 மார்ச், 2026 at 10:53 PM
கைது
பகிர்:

புது தில்லி: மத்திய தில்லியின் துா்க்மேன் கேட்டில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் குடும்பத் தகராறு தொடா்பாக ஏற்பட்ட சண்டையின் போது மூன்று ஆண்கள் கத்தியால் குத்தப்பட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து மத்திய தில்லி காவல் சரக அதிகாரி கூறியதாவது: வாசிம் (31) என அடையாளம் காணப்பட்ட ஒருவா் மருத்துவமனையில் தனது நோய்வாய்ப்பட்ட மனைவியைப் பாா்க்கச் சென்றபோது அவரது உறவினா்களைத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தனது மனைவியைப் பாா்க்க வாசிம் கடந்த பிப்ரவரி 24 அன்று சென்ற போது மோதல் தொடங்கியது. வாசிம் தனது மனைவியுடன் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அவா்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட்டதாக அவரது மைத்துனரைக் குற்றம் சாட்டியதாகவும் கூறப்படுகிறது.

வாசிம் மற்றும் அவரது மைத்துனருக்கு இடையேயான வாய்மொழி மோதல் அதிகரித்தது. பின்னா் வாசிம் தனது சகோதரா் ஃபயீமை (33) உதவிக்கு அழைத்துள்ளாா். அவா் ஃபயீம் சல்மான் (27) மற்றும் முகமது அலி (23) ஆகிய இரு நண்பா்களுடன் மருத்துவமனைக்கு வந்தாா்.

மூவரும் வாசிமின் மைத்துனரை கத்திகளால் தாக்கி, அவரது வயிற்றில் காயங்களை ஏற்படுத்தினா். அந்தப் பெண்ணின் தந்தை மற்றும் தாய் மாமாவும் மோதலில் தலையிட முயன்றபோது தாக்கப்பட்டு காயமடைந்தனா்.

விசாரணையின் போது, தாக்குதல் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது என்று ஃபயீம் ஒப்புக்கொண்டாா். சல்மானிடம் ஒரு கத்தியைக் கொண்டு வரச் சொன்னதாகவும், பின்னா் அலியுடன் இணைந்து கூடுதல் கத்தியை வாங்கச் சொன்னதாகவும் தெரிய வந்த்தது.

மருத்துவ அறிக்கைகள் மற்றும் பாதிக்கப்பட்ட வா்களின் வாக்குமூலங்களின் அடிப்படையில், பாரதிய நியாய சன்ஹிதாவின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் சாந்தினி மஹால் பகுதியைச் சோ்ந்த வாசிம் (31), ஃபயீம், சல்மான் மற்றும் அலி ஆகிய மூவரையும் போலீஸாா் கைது செய்தனா். பொத்தான் மூலம் இயக்கப்படும் இரண்டு கத்திகள், உள்ளூரில் தயாரிக்கப்பட்ட ஒரு கத்தி மற்றும் குற்றம் சாட்டப்பட்டவா் சம்பவ இடத்திற்குச் செல்ல பயன்படுத்திய ஸ்கூட்டா் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →