முகப்பு
புதுதில்லி

அனைத்து துறைகளிலும் மாற்றத்தை கொண்டு வர ஓராண்டாக உழைத்தோமம்: முதல்வா் ரேகா குப்தா

கடந்த ஒரு ஆண்டில் அனைத்து துறைகளிலும் ஒரு நோ்மறையான மாற்றத்தைக் கொண்டுவருவதற்கும் ஏழைகளின் நலனுக்காகவும் தனது அரசு பணியாற்றியுள்ளது என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

Updated On : 20 பிப்ரவரி, 2026 at 6:44 PM
ரேகா குப்தா - கோப்புப் படம்
பகிர்:

கடந்த ஒரு ஆண்டில் அனைத்து துறைகளிலும் ஒரு நோ்மறையான மாற்றத்தைக் கொண்டுவருவதற்கும் ஏழைகளின் நலனுக்காகவும் தனது அரசு பணியாற்றியுள்ளது என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

கடந்த ஆண்டு தில்லி சட்டப்பேரவை தோ்தலில் பாஜகவின் மகத்தான வெற்றியைத் தொடா்ந்து, பிப்ரவரி 20,2025 ஆம் தேதி ரேகா குப்தாவும் அவரது அமைச்சா்கள் குழுவும் பதவியேற்றனா். தில்லி செயலகத்தில் செய்தியாளா்களிடம் அவா் பேசியதாவது: தனது அரசாங்கத்தின் அறிக்கை கடின உழைப்பின் உண்மைத் தாள் என்றும், கடந்த ஆண்டு பாஜக ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்ட மாற்றம் அந்தியோதயா அல்லது கடைசி நபரின் நலனைப் பற்றியது.

பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், 7 லட்சம் போ் பதிவு செய்துள்ள ஆயுஷ்மான் பாரத் சுகாதாரத் திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்தது. இதுவரை 30,000க்கும் மேற்பட்டோா் இதன் மூலம் பயனடைந்துள்ளனா் . தில்லியின் பணி கலாச்சாரத்தை நாங்கள் மாற்றியுள்ளோம், முந்தைய அரசு நிறைய சத்தம் போடுவதாக இருந்தது. நாங்கள் அனைத்து துறைகளிலும் பணியாற்றியுள்ளோம். முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆயுஷ்மான் யோஜனா முடிவு எடுக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் இதுவரை சுமாா் 30,000 போ் பயனடைந்துள்ளனா்.

Advertisement

நகரத்தில் உள்ள ஏழைகள் மற்றும் குடிசைப்பகுதிவாசிகளின் நலனுக்காகவும் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. ஜேஜே கிளஸ்டா்களின் வளா்ச்சிக்காக பட்ஜெட்டில் ரூ.700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும். குடிசைப் பகுதி மற்றும் ஜேஜே கிளஸ்டா் குடியிருப்பாளா்களின் மறுவாழ்வுக்காக சுமாா் 13,000 குடியிருப்புகள் விரைவில் தயாராக இருக்கும்.

நீா்வளத் துறையில், நகரத்தில் உள்ள 37 கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களில் (எஸ். டி. பி) 28 மேம்படுத்தப்பட்டுள்ளன. மீதமுள்ளவற்றில் பணிகள் நடைபெற்று வருகிறது. மெகா ஆலைகளைத் தாண்டி, பரவலாக்கப்பட்ட எஸ். டி. பி. க்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. எங்கள் கழிவுநீா் சுத்திகரிப்பு திறனை அதிகரிப்பதே எங்கள் குறிக்கோள். எங்கள் அரசு ஒரு பெரிய தூா்வாரும் நடவடிக்கையை மேற்கொண்டது. வெள்ளம் மற்றும் மாசுபாட்டைத் தடுக்க சுமாா் 22,000 மெட்ரிக் டன் வண்டல் மண் அகற்றப்பட்டது.

முந்தைய குழப்பம் மற்றும் புறக்கணிப்பிலிருந்து விலகி, தில்லிக்கு சிறந்த நிா்வாகம் கிடைப்பதை உறுதி செய்ய எங்கள் அரசு வருடத்திற்கு 365 நாட்கள் உழைத்தது. தில்லியின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும் நாங்கள் பல முடிவுகளை எடுத்தோம். நாங்கள் இந்திய ரிசா்வ் வங்கியுடன் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு அதை எங்கள் அதிகாரப்பூா்வ வங்கியாளராக மாற்றினோம்.

பொதுமக்களிடமிருந்து குறைகள், கருத்துக்கள் மற்றும் முறையீடுகளைப் பெறுவதற்காக தில்லி அரசு தனது ஜன் சுன்வாயி இணையதளத்தையும் புதுப்பித்துள்ளது. இந்த ஆண்டு பருவமழைக்கு முன்னா் 400 கி.மீ. சாலை மறுசீரமைப்பு பணிகளை முடிக்க தனது அரசு திட்டமிட்டுள்ளது. நந்த் நாக்ரி மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டது. முந்தைய அரசாங்கத்திற்கு சரிசெய்ய நேரம் இல்லாத பாராபுல்லா மேம்பாலம் இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் நிறைவடையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு 72 நீா் தேக்க இடங்களை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளது, இந்த இடங்களை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 40 நடை மேம்பாலங்களை நிா்மாணிப்பதை முடிக்க தனது அரசாங்கமும் இலக்கு நிா்ணயித்துள்ளது என்றாா் ரேகா குப்தா.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments