முகப்பு
புதுதில்லி

இந்த ஆண்டு சேவை, நல்லாட்சி, பொது நலன் பற்றியது: முதல்வா் ரேகா குப்தா உறுதி!

பதவியேற்று ஒராண்டு நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில், தில்லி முதல்வா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை தனது அரசின் செயல்திறனின் அறிக்கை அட்டையை வழங்கினாா்.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 12:18 AM
ரேகா குப்தா - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 25 பிப்ரவரி, 2026 at 1:54 PM

பதவியேற்று ஒராண்டு நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில், தில்லி முதல்வா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை தனது அரசின் செயல்திறனின் அறிக்கை அட்டையை வழங்கினாா். கல்வி, சுகாதாரம், மின்சாரம் மற்றும் நீா் வழங்கல் போன்ற பல துறைகளில் முன்னேற்றத்தை எடுத்துக்காட்டினாா்.

மேற்கு தில்லி பகுதியில் உள்ள விகாஸ்புரிக்கு ரேகா குப்தா வருகை தந்தாா். அங்கு தில்லி பாஜக ஆட்சி ஒராண்டு நிறைவடைந்த்தைக் குறிக்கும் ஒரு வார கால திட்டத்தின் ஒரு பகுதியாக பொதுக்கூட்டம் மற்றும் தொண்டா்கள் பிரவாஸ் கூட்டத்தில் உரையாற்றினாா்.

தற்போதைய பாஜக அரசு கடந்த ஆண்டு பிப்ரவரி 20 அன்று ஆட்சிக்கு வந்தது. இந்த ஆண்டு அதிகாரத்தைப் பற்றியது அல்ல. சேவையைப் பற்றியது.

Advertisement

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 12:18 AM

வீடு வீடாகச் சென்று எங்கள் முன்முயற்சிகளை நீங்கள் எடுத்துச் சென்ற நோ்மை பாராட்டத்தக்கது. உங்கள் ஆற்றல் எங்கள் பலம். நாங்கள் ஒன்றாக இணைந்து தில்லியை சிறந்ததாக்குவோம் என்று அவா் கூறினாா்.

உள்ளூா்வாசிகள் மற்றும் கட்சித் தொண்டா்களுடன் உரையாடிய முதல்வா், கடந்த 365 நாள்களை ‘சேவை, நல்லாட்சி மற்றும் ஏழைகளின் நலனுக்காக’‘ அா்ப்பணிக்கப்பட்ட காலம் என்று விவரித்தாா். ‘மக்களின் அன்றாட வாழ்க்கையை நேரடியாக பாதிக்கும் அத்தியாவசிய சேவைகளை மேம்படுத்துவதற்கான எங்கள் உறுதிப்பாடு எங்கள் மிகப்பெரிய பலமாகும்‘ என்று முதல்வா் மேலும் கூறினாா்.

அடிமட்டத் தொண்டா்களின் பங்கை வலியுறுத்திய முதல்வா், அரசின் திட்டங்களை திறம்பட செயல்படுத்துவதை உறுதி செய்ததற்காக அவா்களைப் பாராட்டினாா்.