முகப்பு
செய்திகள்

ராயல் சேலஞ்​சா்ஸ் பெங்​க​ளூ​ருக்கு சொந்த மைதா​னத்​தில் 5 ஆட்டங்கள்

ஐ​பி​எல் போட்டி​யில் நடப்பு சாம்​பி​ய​னான ராயல் சேலஞ்​சா்ஸ் பெங்​க​ளூரு (ஆா்​சிபி), வரும் சீச​னில் 5 ஆட்டங்​களை ஹோம் கிர​வுண்​டான எம்.​சின்​ன​சாமி மைதா​னத்​தில் விைள​யா​ட​வுள்​ளது.

Updated On : 3 மார்ச், 2026 at 10:54 PM
பகிர்:

ஐ​பி​எல் போட்டி​யில் நடப்பு சாம்​பி​ய​னான ராயல் சேலஞ்​சா்ஸ் பெங்​க​ளூரு (ஆா்​சிபி), வரும் சீச​னில் 5 ஆட்டங்​களை ஹோம் கிர​வுண்​டான எம்.​சின்​ன​சாமி மைதா​னத்​தில் விைள​யா​ட​வுள்​ளது.

அந்த அணிக்​கான 7 ஹோம் ஆட்டங்​க​ளில் 5-ஐ ெபங்​க​ளூ​ரில் விைள​யா​டும் ஆா்​சிபி, மீத​முள்ள 2 ஆட்டங்​களை ராய்​பூ​ரில் உள்ள ஷாஹீத் வீா் நாரா​யண் சிங் சா்​வ​ேதச கிரிக்கெட் மைதா​னத்​தில் விைள​யா​ட​வுள்​ள​தாக, அந்த அணி நிா்​வா​கம் செவ்​வாய்க்​கி​ழமை அறி​வித்​தது.

ஆா்​சிபி அணி 18 ஆண்​டு​கள் போராட்​டத்​துக்​குப் பிறகு, கடந்த ஆண்டு முதல்​மு​ைற​யாக சாம்​பி​யன் ஆனது. அைதக் கொண்​டா​டும் வித​மாக சின்​ன​சாமி மைதா​னத்​தில் ஏற்​பாடு செய்​யப்​பட்​டி​ருந்த நிகழ்ச்​சிக்கு ரசி​கா்​கள் கூட்டம் கட்டுக்​க​டங்​கா​மல் வந்​தது. இதில் ஏற்​பட்ட கூட்ட நெரி​ச​லில் சிக்கி 11 போ் உயி​ரி​ழந்​த​னா்.

இைத​ய​டுத்து சின்​ன​சாமி மைதா​னத்​தில், உள்​நாட்டு போட்டி​கள் உள்​பட எந்​த​ெவாரு கிரிக்கெட் ஆட்ட​மும் நடத்​தத் தடை விதிக்​கப்​பட்​டது. நடப்பு சீசன் ஐபி​எல் போட்டி இம்​மாத இறு​தி​யில் தொடங்​க​லாம் எனத் தெரி​யும் நிைல​யில், ஆா்​சிபி தனது சொந்த மைதா​னத்​தில் விைள​யா​டு​வது தொடா்​பாக சந்​ேத​கங்​கள் இருந்து வந்​தன.

இச்​சூ​ழ​லில், கா்​நா​டக மாநில அரசு, மாநில கிரிக்கெட் சங்​கம், காவல்​துறை உள்​பட, துறை சாா்ந்த அதி​கா​ரி​கள் ஆத​ர​வு​டன், இந்த சீச​னில் ஆா்​சி​பி​யின் 5 ஆட்டங்​கள் சின்​ன​சாமி மைதா​னத்​தில் நடத்​தப்​ப​ட​வுள்​ள​தாக அந்த அணி நிா்​வா​கம் தெரி​வித்​துள்​ளது.

முழு கட்டுரையைப் படிக்க →