ஹிந்துஸ்தான் பேப்பர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் (HPCL) காலியாக உள்ள அப்ரண்டீஸ் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: அப்ரண்டீஸ்
பணியிடம்: அசாம்
காலியிடங்கள்: 60
பயிற்சி காலம்: 1 வருடம்
பிரிவு வாரியான காலியிடங்கள் விவரம்:
1. Engineering Graduate Apprentices - 24
2. Technician (Diploma Holder) Apprentices - 28
3. Technician (Vocational) Apprentices - 09
கல்வித்தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில், கெமிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கணினி அறிவியல், இன்ஸ்ட்ரூமென்டேஷன், ஆட்டோமொபைல் போன்ற பிரிவுகளில் டிப்ளமோ, பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.01.2016 தேதியன்படி 30-க்குள் இருக்க வேண்டும்.
உதவித்தொகை:
Engineering Graduate Apprentices-க்கு மாதம் ரூ.7,500.
Technician (Diploma Holder) Apprentices-க்கு மாதம் ரூ.6,000.
Technician (Vocational) Apprentices-க்கு மாதம் ரூ.4,500
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.hindpaper.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல் அட்டெஸ்ட் பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Deputy General Manager (HR & ES),
HPC Ltd, Nagaon Paper Mill,
P.O. Kagajnagar,
Dist: Morigaon, Assam, PIN-782413.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.11. 2015
மேலும் விவரங்கள் அறிய http://www.hindpaper.in/images/pdf/Publ2015.pdf என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.