வேலைவாய்ப்பு

விருதுநகர் மாவட்ட ஊரக வாழ்வாதார திட்டம் சார்பில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

விருதுநகர் மாவட்ட ஊரக வாழ்வாதார திட்டம் மற்றும் புதுவாழ்வு திட்டம் சார்பில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் பயன்பெறும் வகையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாளை (சனிக்கிழமை) நடைபெற இருக்கிறது.

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்ட ஊரக வாழ்வாதார திட்டம் மற்றும் புதுவாழ்வு திட்டம் சார்பில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் பயன்பெறும் வகையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாளை (சனிக்கிழமை) நடைபெற இருக்கிறது.

    இது குறித்து ஆட்சியர் வே.ராஜாராமன் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இம்மாவட்டத்தில் கடந்த 2012-13 முதல் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், காரியாபட்டி மற்றும் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியங்களில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    அதேபோல், சாத்தூர், வெம்பக்கோட்டை, வத்திராயிருப்பு மற்றும் நரிக்குடி ஊராட்சி ஒன்றியங்களில் புதுவாழ்வு திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டங்கள் மூலம் கிராம பகுதியில் ஏழை எளிய மக்களின் பொருளாதாரத்தை பெருக்கும் திட்டமாகவும், அதன் அதன் மூலம் வறுமையை குறைப்பதே நோக்கமாகும். இதற்காக கிராமங்களில் வறுமை ஒழிப்பு சங்கத்தின் மூலம் அதன் உறுப்பினர்களுக்கு அந்தந்த பகுதியில் உள்ள தொழில் மூலம் தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்வதற்கேற்ப நிதி உதவியும் வழங்கப்படுகிறது.

     அதோடு, கிராமங்களில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் ஆகியோருக்கு வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சி அளி்த்து, நேரடியாக வேலைவாய்ப்பும் தனியார் நிறுவனங்களில் பெற்றுத் தரப்படுகிறது. அதன் அடிப்படையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள கேவிஎஸ் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையில் நடைபெற இருக்கிறது.

     இம்முகாமில் 8-ம் வகுப்பும், அதற்கு மேலும் படித்த வேலையில்லாத இளைஞர்கள் மற்றும் பெண்கள் ஆகியோருக்கு எல் அன்ட் டி, ஹூன்டாய், டிவிஎஸ், யுரேகா, மெக்டான் இந்தியா, அப்பல்லோ மற்றும் பிரசித்தி பெற்ற நிறுவனங்களில் இருந்து தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்வதற்கு அதிகாரிகள் வருகின்றனர். எனவே படித்த, படிக்காத வேலையில்லாத, குறைந்த ஊதியத்துடன் பணிபுரியும் இம்மாவட்டத்தைச் சேர்ந்த இருபாலரும் மேற்குறிப்பிட்ட இடத்தில் நடைபெற இருக்கிற வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயனடையுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT