வேலைவாய்ப்பு

சிறிய, நடுத்தர தொழில் துறையில் வேலைவாய்ப்புக்கு தனி இணைய தளம்!

சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையில் வேலை வாய்ப்பை வழங்கி வருகின்றன. வேலையில்லாத

எம். அருண்குமார்

சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையில் வேலை வாய்ப்பை வழங்கி வருகின்றன. வேலையில்லாத இளைஞர்கள் புதிதாகத் தொழில் தொடங்கி, தங்களுடைய வருமானத்தைப் பெருக்கிக் கொண்டு மற்றவர்களுக்கும் வேலை வாய்ப்பை வழங்கி வருகின்றனர்.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையில் வேலை வாய்ப்பை அதிகரிக்க மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை சார்பாக தனி இணையதளத்தை உருவாக்கியுள்ளது. அந்த இணையதளத்தில் வேலை வாய்ப்பை வழங்கும் தொழிற்சாலைகளும், வேலை வாய்ப்புகளைத் தேடுவோரும் தங்கள் குறித்த தகவல்களை பதிவு செய்து தங்களுக்கென தனிக் கணக்கைத் தொடங்க வேண்டும். 

கணக்கைத் தொடங்கி அந்த கணக்கிற்குள் உள் நுழைய தங்களுக்கென தனிப் பெயரையும், ரகசிய குறியீட்டையும் உருவாக்கிக் கொள்ள வேண்டும். அவ்வாறு வேலை வாய்ப்புகளைத் தேடுவோரும், வேலை வாய்ப்பு வழங்குவோரும் முறையே, தங்களுக்கான வேலையையும், வேலையாட்களையும் தேடி தங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு தீர்வு காணலாம். 

இந்த இணைய தளம் மூலம் திறன் மிகுந்த பணியாளர்களைத் தேடும் முயற்சிகள் எளிதாகிவிடுகின்றன. அதற்கான செலவுகளும் குறைந்துவிடுகின்றன. அதே போல திறமை இருந்தும் வேலை கிடைக்காமல் தவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு சிறந்த வேலை வாய்ப்புகள் கிடைக்கும் சூழ்நிலை உருவாகும். வேலை தேடுவோருக்கு இது நல்ல வாய்ப்பாக உள்ளது.  இணையதள முகவரி:  www.eex.dcmsme.gov.in

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஸி.யிடம் போராடி வீழ்ந்தது இந்தியா!

ஜெஸிக்கா பெகுலா சாம்பியன்!

ரூ. 213 கோடி அபராதம்! மெட்டா - வாட்ஸ்ஆப் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

அசத்தல் அல்கராஸ் சாம்பியன்!

இடையறா பயணத்தின் 'மைல்கல்' தேர்தல்!

SCROLL FOR NEXT