வேலைவாய்ப்பு

எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் 550 செவிலியர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

எய்ம்ஸ் என்ற அழைக்கப்படும் அகில இந்திய மருத்துவ அறிவியல் மையத்தில் ஜோத்பூர் மையத்தில்

ஆர். வெங்கடேசன்

எய்ம்ஸ் என்ற அழைக்கப்படும் அகில இந்திய மருத்துவ அறிவியல் மையத்தில் ஜோத்பூர் மையத்தில் நிரப்பப்பட உள்ள 550 ஸ்டாப் நர்ஸ் (கிரேடு –2) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்தம் காலியிடங்கள்: 550
பதவி: ஸ்டாப் நர்ஸ் (கிரேடு –2)
வயது வரம்பு: 23.10.2016 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: மெட்ரிக்குலேசன் தேர்ச்சி அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்று, ஜெனரல் நர்சிங், மிட்வைப், மேல் நர்ஸ் போன்ற சான்றிதழ் படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. எஸ்.சி, எஸ்.டி, மாற்றுத்திறனாளிகள், பெண்கள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.aiimsjodhpur.edu.in  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.10.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.aiimsjodhpur.edu.in  என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூர் தவெக கூட்டத்தில் உயர் நீதிமன்ற விதிமுறைகள் மீறல்! காவல்துறை

தவறாக வழிநடத்தும் ராகுல் மீது வழக்கு: மத்திய அமைச்சர்

சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள்! பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்து; சசிகலா முக்கிய முடிவு!

தனியார் ஆம்னி பேருந்து மோதி திமுக பிரமுகர், அவரது தோழியும் பலி

SCROLL FOR NEXT