வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பில்லாத இளைஞர்கள் கவனத்துக்கு...

DIN

காரைக்கால்:  காரைக்கால் நகராட்சி அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: காரைக்காலில் நகர்ப்புற வளர்ச்சிக்காக, மத்திய அரசின் திட்டமான தேசிய வாழ்வாதார மையம் தொடங்கவுள்ளது.
 ஆர்வமுள்ள படித்த வேலையில்லாத ஆண்கள், பெண்கள், பயிற்சி பெற்ற மோட்டார், மின்சாரம், வீட்டு உபயோக மின்னணு சாதனங்கள் பழுது நீக்குதல், கணினி பழுது நீக்குதல், பிளம்பர், தச்சு வேலை, தையல் பயிற்சி, சித்திர பூ வேலைப்பாடு, பொம்மை செய்தல், வீட்டு வேலை செய்தல், தினக்கூலி தோட்ட வேலை செய்பவர் ஆகியோர் வரும் 20.10.2016-க்குள் காரைக்கால் நகராட்சியில் சம்பந்தப்பட்ட பிரிவில் தங்கள் பெயரை பதிவு செய்துகொள்ளவேண்டும். தகுதிச் சான்றிதழ், குடும்ப அட்டையுடன் வரவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம்!

பிளஸ் 2 தேர்வு: திருப்பூர் மாவட்டத்தில் 97.45% தேர்ச்சி

குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

ஒடிஸாவில் பாஜக முதல்வர் ஜூன் 10-ல் பதவியேற்பார்: மோடி

SCROLL FOR NEXT