வேலைவாய்ப்பு

நீங்கள் எம்பிஏ பட்டதாரிகளா... உங்களுக்கு ONGC-ல் வேலை

பொதுத்துறை நிறுவனமான எண்ணெய் மற்றும் இயற்கை வாயு நிறுவனத்தில் (ONGC)  காலியாக உள்ள பணியிடங்கள் UGC-NET 2017 தேர்வுகளின் மதிப்பெண்கள்

ஆர். வெங்கடேசன்


பொதுத்துறை நிறுவனமான எண்ணெய் மற்றும் இயற்கை வாயு நிறுவனத்தில் (ONGC)  காலியாக உள்ள பணியிடங்கள் UGC-NET 2017 தேர்வுகளின் மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.5/2017 (R & R)

பணி: Human Resource Executive (E1 Level)
காலியிடங்கள்: 20
தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.24,900 - 50,500

பணி: Finance and Accounts Officer
காலியிடங்கள்: 05
தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் நிதியியல் துறையில் எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: 24,900 - 50,500

பணி: Official Language Officer
காலியிடங்கள்: 02
தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் ஆங்கிலத்தை ஒரு பாடமாகக் கொண்டு ஹிந்தியில் முதுகலை பட்டம் பெற்று மொழிப்பெயர்ப்பு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.24,900 - 50,500

வயதுவரம்பு: மேற்கண்ட அனைத்து பணியிடங்களுக்கும் 01.01.2017 தேதியின்படி கணக்கிடப்படும். பொது பிரிவினருக்கு 30க்குள்ளும், ஓபிசி பிரிவினருக்கு 33க்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 35க்குள்ளும், மாற்றுத்திறனாளிகள் 40க்குள்ளும் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: வரும் நவம்பர் மாதம் நடத்தப்படும் UGC-NET தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: முதலில் http://cbsenet.nic.in என்ற இணையதள முகவரியில் நவம்பர் 2017-ல் நடத்தப்பட உள்ள UGC-NET தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் அதில் கொடுக்கப்பட்டுள்ள பதிவு எண்ணைக்கொண்டு www.ongcindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.09.2017

UGC-NET தேர்வு நடைபெறும் தேதி: 05.11.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ongcindia.com இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இராஜேந்திர சோழனின் அரிய தகவல்கள் 1001 (பாகம் 1, 2)

போத்து

சுவடிகள் போற்றுதும்

ஒப்பில் வள்ளுவம் - விரிவாக்கப் பதிப்பு

ஆதித்த கரிகாலன்

SCROLL FOR NEXT