வேலைவாய்ப்பு

ஆசிரியர் பணிக்காக காத்திருப்பவர்களா நீங்கள்..? இதோ 8 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு!

நாடு முழுவதும் 137 முக்கிய நகரங்களில் செயல்பட்டு வரும் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான பள்ளிகளில்

ஆர். வெங்கடேசன்

நாடு முழுவதும் 137 முக்கிய நகரங்களில் செயல்பட்டு வரும் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான பள்ளிகளில் (Army Public School) காலியாக உள்ள 8 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் 21-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிக்கை எண்.B/45706/CSB-2017/AWES

மொத்த காலியிடங்கள்: 8000

பணி: Post Graduate Teachers (PGT)
தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் சம்மந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் முதுகலை பட்டம் பெற்று பி.எட் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Trained Graduate Teachers (TGT)
தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் சம்மந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் இளங்கலை பட்டத்துடன் பி.எட் முடித்து CTET அல்லது TNTET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Primary Teachers (PRT)
தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டத்துடன் பி.எட் முடித்தவர்கள், ஆசிரியர் கல்வி பயிற்சியில் டிப்ளமோ (D.T.Ed) முடித்து CTET அல்லது TNTET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.04.2018 தேதியின்படி 40க்குள் இருக்க வேண்டும். 5 ஆண்டு ஆசிரியர் பணி அனுபவம் உள்ளவர்கள் 57க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: மூன்று கட்ட தகுதி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். முதல்கட்ட தேர்வில் கொள்குறிவகை கேள்விகள் கொண்ட ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். அதில் வெற்றிபெற்றவர்களுக்கு இரண்டான் கட்ட தேர்வன நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். பின்னர் மூன்றாம் கட்ட தேர்வான கற்பிக்கும் திறன் மற்றும் கணினி கையாளும் திறன் சோதிக்கப்பட்டு இறுதியில் தகுதியானவர்களுக்கு பணி உத்தரவு வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.aps-csb.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.12.207
 
தேர்வு மையங்கள்: இந்தியா முழுவதும் 77 நகங்களில் ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது. தமிழகத்தில் சென்னை, கோவை இரண்டு நகங்களில் மட்டும் தேர்வு நடைபெறுகிறது.

ஆன்லைன் தேர்வு நடைபெறும் தேதி: 15,17.01.2018 ஆகிய இரு தேதிகளில் நடைபெறுகிறது.  

தேர்வு முடிவு வெளியிடப்படும் தேதி: 27.01.2018

மேலும் முழுமையான விரிவான தகுதிகள், தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://aps-csb.in/PdfDocuments/Guidelines.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆலந்தூர் முதல்வர் திருமண மாளிகையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

கிலோவுக்கு ரூ. 5,000 உயர்ந்த வெள்ளி: தங்கம் விலை?

தமிழ்நாட்டை வீழ்த்த நினைக்கும் பாஜக: முதல்வர் ஸ்டாலின்

அமெரிக்காவின் 126% வரி எதிரொலி! சூரிய சக்தி பங்குகள் 14% சரிவு!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை முடக்கியது திமுக: கே. அண்ணாமலை குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT