வேலைவாய்ப்பு

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுகளுக்கான வினா-விடை - 12

சொல்லின் புறத்தே நின்று சுட்டுப்பொருளை தகருவது - புறச்சுட்டு (எ.கா. அக்குதிரை)

ஆர். வெங்கடேசன்

*  சொல்லின் புறத்தே நின்று சுட்டுப்பொருளை தகருவது - புறச்சுட்டு (எ.கா. அக்குதிரை)
*   தொலைவில் உள்ளதைச் சுட்டும் எழுத்து - சேய்மைச்சுட்டு (அவன்) 
*   அருகில் உள்ளதை சுட்டும் எழுத்து - அண்மைச்சுட்டு (இவன்)
*   அ, இ, என்னும் சுட்டுடெழுத்துக்கள் அந்த , இந்த எனத் திரிந்து வழங்குவதை - சுட்டுத் திரிபு.
*   நாம் பயன்படுத்தாத சுட்டு எழுத்து - "உ" 
*   வினாப்பொருளை உணர்த்தும் எழுத்துக்கள் - வினா எழுத்துக்கள்
*   சொற்களின் முதலில் நின்று வினாப்பொருளைத் தரும் எழுத்துக்கள் - எ, யா (எது?, யார்?)
*   சொற்களின் இறுதியில் நின்று வினாப்பொருளைத் தரும் எழுத்துக்கள் - ஓ, ஆ (அவனோ?, அதுவா?)
*   சொல்லின் முதலிலும், இறுதியிலும் நின்று வினாப்பொருளைத் தரும் எழுத்து - ஏ, (ஏன்? அன்றோ?)
*   உயிர் எழுத்துக்களில் குற்றெழுத்துக்களுக்கு நெட்டெழுத்துக்கள் இனமாகும்.

*   வல்லின மெய்யெழுத்துகளுக்கு மெல்லினமெய் இனமாகும்.
*   எழுத்துகள் ஒலிக்கும் காலஅளவு - மாத்திரை ஆகும்
*   குறில் - 1 மாத்திரை, நெடில் - 2 மாத்திரை
*   ஆய்தத்திற்கும், மெய்யெழுத்துக்களுக்கும் 1/2 மாத்திரை.
*   உயிரளபெடைக்கு மூன்று மாத்திரை, ஒற்றளபெடைக்கு 1 மாத்திரை
*  செய்யுளிசை அளபெடை ஈரசை கொண்ட சீர்களாக மட்டும் வரும். (உழாஅர், படா அர்)
* செய்யுளிசை அளபெடையை இசைநிறையளபெடை என்றும் வழங்குவர் (அளபெடை என்பதன்பொருள் நீண்டு ஒலித்தல்)
* ஓசை குறையாத போதும் இனிய இசைக்காக அளபெடுப்பது இன்னிசை அளபெடை(செய்யுளில்)
*  இன்னிசை அளபெடை மூவசை சீர்களாக மட்டும் வரும்(கொடுப்பதூஉம், எடுப்பதூஉம்)
*   பெயர்ச்சொல் அளபெடுத்து, வினையெச்சப்பொருளில் வருவது - சொல்லிசை அளபெடை

*  சொல்லிசை அளபெடை "இ" என்னும் எழுத்தில் முடிவு பெற்றிருக்கும் (நசைஇ, நிறீஇ)
* செய்யுளில் ஓசை குறைந்தால் மெய்யெழுத்துக்கள் அளபெடுப்பது ஒற்றளபெடை.
*   குற்றியலுகரம் - குறுமை + இயல் + உகரம் எனப்பிரியும்.
*   குற்றியலுகரம் ஆறு வகைப்படும்.
*   குற்றியலுகரத்திற்கு அரை மாத்திரை
*   நெடில் தொடர்க் குற்றியலுகரம் இரண்டு எழுத்துக்களைப் பெற்று வரும் (ஆடு, மாடு,காது)
*   குறுகிய ஓசை உடைய இகரம் - குற்றியலிகரம்.
* தனக்குரிய ஒரு மாத்திரை அளவிலிருந்து குறையாத உகரம் முற்றியலுகரம்(பசு, எள்ளு,கதவு)
*   எழுத்துக்களின் பிறப்பை இரு வகையாகப் பிரிக்கலாம்.
*   குறுக்கங்கள் நான்கு வகைப்படும்.

*   ஐகாரம் சொல்லுக்கு மூன்று இடங்களில் தன் மாத்திரை அளவில் குறைந்து ஒலிக்கும்.
*   வளையல்- இச்சொல்லில் ஐகாரம் ஒரு மாத்திரை குறைந்து ஒலிக்கிறது.
*  ஐகாரம் சொல்லுக்கு முதலில் 11/2 மாத்திரையாகவும், இடையிலும், கடையிலும் ஒரு மாத்திரை குறைந்து ஒலிக்கும்.
*  ஒளகாரக்குறுக்கம் சொல்லுக்கு முதலில் மட்டுமே குறைந்து ஒலிக்கும் (11/2 மாத்திரை)
*    மகரக்குறுக்கம் இரண்டு இடங்களில் குறைந்து ஒலிக்கும்.
*   மகரக்குறுக்கத்திற்கும், ஆய்தக்குறுக்கத்திற்கும் மாத்திரை- கால்
* லகர, ளகர ஈற்றுப்புணர்ச்சியில் ஆய்தம் அரை மாத்திரையிலிருந்து கால் மாத்திரையாக குறுகும்.
*   பல்+தீது பஃறீது. முள்+தீது முஃபீது

தொடரும்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆலந்தூர் முதல்வர் திருமண மாளிகையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

கிலோவுக்கு ரூ. 5,000 உயர்ந்த வெள்ளி: தங்கம் விலை?

தமிழ்நாட்டை வீழ்த்த நினைக்கும் பாஜக: முதல்வர் ஸ்டாலின்

அமெரிக்காவின் 126% வரி எதிரொலி! சூரிய சக்தி பங்குகள் 14% சரிவு!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை முடக்கியது திமுக: கே. அண்ணாமலை குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT