வேலைவாய்ப்பு

எரிபொருள் ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானி பணி

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் உள்ள எரிபொருள் ஆராய்ச்சி மையத்தில் (Central Institute of Mining and Fuel Research) சீனியர் சயின்டிஸ்ட், சயின்டிஸ்ட்

ஆர். வெங்கடேசன்

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் உள்ள எரிபொருள் ஆராய்ச்சி மையத்தில் (Central Institute of Mining and Fuel Research) சீனியர் சயின்டிஸ்ட், சயின்டிஸ்ட் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் எம்.இ.,/ எம்.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

பணி - காலியிடங்கள் விவரம்:
பணி: Scientist/ Sr. Scientist - 04
தகுதி: பொறியியல் துறையில் மைனிங் பிரிவில் எம்.இ., எம்.டெக்., பி.எச்டி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Scientist/ Senior Scientist - 02
தகுதி: பொறியியல் துறையில் வேதியியல் பிரிவில் எம்.இ.,எம்.டெக்., பி.எச்டி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Scientist, Senior Scientist: - 01
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல் பிரிவில் எம்.இ., எம்.டெக். பி.எச்டி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Scientist/ Senior Scientist - 03
தகுதி: அறிவியல் துறையில் Inorganic, Physical, Applied Chemistry பிரிவில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Scientist/ Senior Scientist - 01
தகுதி: பொறியியல் துறையில் Civil Engineering, Environmental Science  பிரிவில் எம்.இ., எம்.டெக்., பி.எச்டி பட்டம்.

பணி: Scientist/ Senior Scientist - 01
தகுதி: அறிவியல் துறையில் தாவரவியல் பிரிவில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Scientist, Senior Scientist - 03
தகுதி: Geology, Applied Geology பாடத்தில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட கல்வித்தகுதியுடன் 3 வருட பணி அனுபவம் உள்ளவர்கள் சீனியர் சயின்டிஸ்டாக பணியில் அமர்த்தப்படுவர்.

சம்பளம்: சீனியர் சயின்டிஸ்ட் பணியிடங்களுக்கு மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.7000 வழங்கப்படும்.
சயின்டிஸ்ட் பணிக்கு மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.6,600 வழங்கப்படும்.

வயது வரம்பு: சீனியர் சயின்டிஸ்ட் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 15.02.2017 தேதியின்படி 37க்குள் இருக்க வேண்டும். சயின்டிஸ்ட் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள்  15.02.2017 தேதியின்படி 32க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.cimfr.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதன் வடிவமைப்பை போன்று கணினியில் தட்டச்சு செய்து, தெளிவாக பூர்த்தி செய்து விண்ணப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Controller of Administration,
Central Institute of Mining & Fuel Research,
Barwa Road, DHANBAD,
Jharkhand.
PIN: 826 015.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி தேதி: 15.2.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.cimfr.nic.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டாச்சு... தண்ணீர் இல்லாமல் தெப்பத் திருவிழா நடைபெறுமா?

இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்

மண்டல அலுவலா்கள், பறக்கும் படை நிலையான கண்காணிப்பு குழுவினருக்கான பயிற்சி கூட்டம்

பிரதமா் மோடி இன்று இஸ்ரேல் பயணம்!

புற்றுநோய் மரபணு வரைபடம்!

SCROLL FOR NEXT