திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றங்களில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: நகல் பரிசோதகர் - 02
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
பணி: முதுநிலை கட்டளை நிறைவேற்றம் - 08
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
பணி: கணிப்பொறி இயக்குநர் - 05
தகுதி: கணிப்பொறி அறிவியல் துறையில் இளங்கலை பட்டம் அல்லது ஏதாவதொரு துறை பட்டத்துடன் கணிப்பொறி துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும் தட்டச்சில் ஆங்கிலம் மற்றும் தமிழில் முதுகலை முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800
பணி: ஒளி பட நகல் எடுப்பவர் - 02
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.4,800- 10,000 + தர ஊதியம் ரூ.1,600
பணி: அலுவலக உதவியாளர் - 49
தகுதி: 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம் ரூ.1,300
பணி: மசால்சி - 13
தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10000 + தர ஊதியம் ரூ.1,300
பணி: அலுவலக காவலர் - 04
தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம் ரூ.1,300
பணி: துப்பரவு பணியாளர் - 02
தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம் ரூ.1,300
வயதுவரம்பு: மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் 01.06.2017 தேதியின்படி கணக்கிடப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: காலியிடங்களுக்கு பெறப்படும் விண்ணப்பங்களின் எண்ணிக்கையை பொறுத்து, தேர்வு குழுவானது எழுத்துத் தேர்வோ அல்லது நேர்முகத்தேர்வு மூலமாகவோ தேர்ந்தெடுப்பது குறித்து இறுதி முடிவு செய்து விண்ணப்பதாரர்களுக்கு பின்னர் தெரிவிக்கப்படும். தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
மாவட்ட நீதிபதி,
திருவமண்ணமாலை மாவட்ட நீதிமன்றம்,
திருவண்ணாமலை - 606 604
அனைத்து தகவல் பரிமாற்றம் மற்றும் தேர்வு நேர்காணலுக்கான அழைப்பு www.ecourts.gov.in/tn/tiruvannamalai என்ற இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.06.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://ecourts.gov.in/sites/default/files/Tamil%20&%20English-Tiruvannamalai_3.pdf என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.