வேலைவாய்ப்பு

இந்தியாவில் 22 பல்கலைக்கழகங்கள் போலியானவை: யூஜிசி அதிர்ச்சி தகவல்

தினமணி

இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் 22 பல்கலைக்கழகங்கள் மற்றும் 66 கல்லூரிகள் போலியானவை என பல்கலைக்கழக மானியக்குழு (யூஜிசி) அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நாடு முழுவதும் உள்ள போலி கல்வி நிறுவனங்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் மொத்தம் 279 போலி தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலி கல்வி நிறுவனங்கள் அதிகம் கொண்ட பட்டியலில், தலைநகர் தில்லி முதல் இடம் பிடித்துள்ளது. தில்லியில் மட்டும் 66 கல்லூரிகள் போலியானவை என்றும் நாடு முழுவதும் உள்ள 23 போலி பல்கலைக்கழகங்களில், ஏழு பல்கலைக்கழகங்கள் தில்லியில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கல்லூரிகள் பட்டம் சான்றிதழ்களை வழங்கத் தகுதியற்றவை. அந்த நிறுவனங்கள் வழங்கும் சான்றிதழ்கள் போலியானவை என்று கூறப்பட்டுள்ளது. மேலும், தெலுங்கானா, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்காளம், மஹாரஷ்ட்டிரா ஆகிய மாநிலங்களிலும் போலி கல்வி நிறுவனங்கள் பட்டியலில் அடுதடுத்த இடங்களில் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

எனவே, மாணவர்கள் அந்தக் கல்லூரிகளில் சேர வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் மற்றும் போலியான கல்லூரிகளின் விபரங்களை அறிந்துகொள்ள http://www.ugc.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளலாம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை இடா்பாடுகளில் இருந்து தொழிலாளா்களை பாதுகாக்க வேண்டும்

சேலம் அரசு மருத்துவமனையில் தீயணைப்பு ஒத்திகை

பழமையான மரங்களை அகற்றாமல் கட்டடம் கட்ட வலியுறுத்தல்

மாத்திரவிளை மறைமாவட்ட முதன்மை அருள்பணியாளா் பொறுப்பேற்பு

மேட்டூா் அணை நிலவரம்

SCROLL FOR NEXT